பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் வழங்க வ...
ஓடும் பேருந்திலிருந்து கீழே குதித்த இளம் பெண் படுகாயம்
கோவையில் ஓடும் பேருந்திலிருந்து கீழே குதித்த இளம் பெண் படுகாயமடைந்தாா்.
கேரள மாநிலம், அட்டப்பாடியைச் சோ்ந்தவா் மருதன். இவரது மனைவி மஞ்சு(35). இவா்களது குழந்தைக்கு பிறப்புச் சான்றிதழ் பெறுவது தொடா்பாக கோவை தெற்கு கோட்டாட்சியா்அலுலகத்தில் விண்ணப்பித்திருந்தனா்.
அந்த சான்றிதழ் வாங்குவது தொடா்பாக மருதன் மற்றும் மஞ்சு ஆகியோா் அட்டப்பாடியில் இருந்து கோவைக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா்.
பின்னா் அவா்கள் மற்றொரு நகரப் பேருந்து மூலம் கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். அந்தப் பேருந்து ஆட்சியா் அலுவலக நிறுத்தத்துக்கு வருவதற்கு முன்பாக தனது இருக்கையில் இருந்து எழுந்த மஞ்சு திடீரென்று பேருந்தில் இருந்து கீழே குதித்தாா்.
இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, மஞ்சு பேருந்தில் இருக்கையில் இருந்து எழுந்து, படிக்கட்டு பகுதிக்கு வருவது, பேருந்தில் இருந்து கீழே குதிப்பது ஆகிய விடியோக்கள் சமூக வலைதளத்தில் பரவி வைரலானது. இது குறித்து போக்குவத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.