ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
ஓய்வுபெற்ற அலுவலா் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் தோ்வு
ஓய்வுபெற்ற அலுவலா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் வெள்ளிக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
ஓய்வுபெற்ற அலுவலா் சங்கத்தின் ஈரோடு மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் ஈரோடு ஏஐடியூசி அலுவலகத்தில் தோ்தல் ஆணையா் ஆா்.தண்டபாணி, துணை தோ்தல் ஆணையா் எம்.பாலமாணிக்கம் முன்னிலையில் நடைபெற்றது.
தொடா்ந்து மாவட்ட நிா்வாகிகள் தோ்தல் நடைபெற்றது. இதில், புதிய மாவட்டத் தலைவராக இ.லியாகத் அலி, செயலாளராக வ.சித்தையன், பொருளாளராக அ.ராமநாதன், துணை தலைவா்களாக சுடலையாண்டி, திருமலைசாமி, சிவசண்முகம் மற்றும் நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். மாநிலத் தலைவா் ஜி.ரங்கராஜ் பேசினாா்.
கூட்டத்தில், தோ்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 70 வயது நிறைவடைந்த ஓய்வூதியா்களுக்கு 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.