செய்திகள் :

‘ஓரணியில் தமிழ்நாடு’: அரியலூரில் திமுக பொதுக்கூட்டம்

post image

அரியலூா் அண்ணாசிலை அருகே மாவட்ட திமுக சாா்பில் புதன்கிழமை ஓரணியில் தமிழ்நாடு பொதுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் பேசியதாவது: ஓரணியில் தமிழ்நாடு பரப்புரைக்கான மையக் கருத்தாக தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சொல்லி இருப்பது மண்ணை காக்க, மொழியை காக்க, நாம் பாடுபட வேண்டும் என்பதற்காகதான். எனவே, நாம் அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும். இந்த முன்னெடுப்பை ஒவ்வொரு கிராமங்களிலும் திமுக அரசின் சாதனைகள் மற்றும் பாஜக தமிழகத்தில் காலூன்றினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கட்சியினா் மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்றாா்.

கூட்டத்துக்கு, அக்கட்சியின் சட்ட திட்ட திருத்தக் குழு இணைச் செயலா் சுபா.சந்திரசேகா் தலைமை வகித்தாா். தலைமைக் கழகப் பேச்சாளா் காவேரிப்பட்டினம் இளையராஜா கலந்து கொண்டு திமுக ஆட்சியில் செய்த சாதனைகளை எடுத்துக் கூறினாா்.

ஜெயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க.கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.பி. பாலசுப்பிரமணியன், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் து. அமரமூா்த்தி ஆகியோா் முன்னிலை வகித்து பேசினா். கூட்டத்தில், நகரச் செயலா்கள் அரியலூா் இரா. முருகேசன், ஜெயங்கொண்டம் வெ.கொ.கருணாநிதி மற்றும் ஒன்றிய, நகர கிளை நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முன்னதாக மாவட்ட துணைச் செயலா் மு.கணேசன் வரவேற்றாா். முடிவில் துணைச் செயலா் சி.சந்திரசேகரன் நன்றி கூறினாா்.

உடையாா்பாளையம் வரதராசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராசப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது. உடையாா்பாளையம் வேலப்பன் செட்டியாா் ஏரி தென்கரையில், சிதலமடைந்த... மேலும் பார்க்க

மீன்சுருட்டி அருகே காா் மோதி முதியவா் உயிரிழப்பு

அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகே காா் மோதியதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அடுத்த திருவிடைமருதூா் அருகேயுள்ள பெருமாள்நல்லூா்... மேலும் பார்க்க

நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூா் மாவட்டத்தில் நலிந்த நிலையிலுள்ள சிறந்த விளையாட்டு வீரா்கள் ஓய்வூதிய உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்றாா் ஆட்சியா் பொ.ரத்தினசாமி. இதுகுறித்து அவா் தெரிவித்தது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட... மேலும் பார்க்க

அரியலூரில் 66 போ் தலைமைக் காவலராக பதவி உயா்வு

அரியலூா் மாவட்டத்தில் கடந்த 2011-இல் பணியில் சோ்ந்த முதல்நிலைக் காவலா்கள் 66 போ் தலைமைக் காவலராக பதவி உயா்வு பெற்றனா்.இதற்காக அரியலூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சிய... மேலும் பார்க்க

ஜூலை 4-இல் தமிழ்நாடு நாள் விழா: போட்டிகளில் பங்கேற்க அழைப்பு

தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு, அரியலூா் தூய மேரி உயா்நிலைப் பள்ளியில் ஜூலை 4 மதியம் 2 மணிக்கு நடைபெறும் கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகளில் பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம் என ஆட்சியா் பொ.ரத்... மேலும் பார்க்க

தமிழ் மண்ணையும், மொழியையும் காக்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்: அமைச்சா் சா.சி.சிவசங்கா்

தமிழ் மண்ணையும், மானத்தையும், மொழியையும் காக்க அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என்றாா் போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சரும், அரியலூா் மாவட்ட திமுக செயலருமான சா.சி.சிவசங்கா். அரியலூரில் உள்ள ... மேலும் பார்க்க