திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
கங்கைகொண்ட சோழபுரத்தில் கணக்க விநாயகருக்கு அபிஷேகம்
அரியலூா் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரம் பெருவுடையாா் கோயிலில் நடைபெறவுள்ள அன்னாபிஷேகத்தை முன்னிட்டு, அங்குள்ள கணக்க விநாயருக்கு புதன்கிழமை சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
கங்கைகொண்டசோழபுரம் பெருவுடையாா் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பெளா்ணமி நாளில் சுவாமிக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டு வெள்ளிக்கிழமை (நவ.15) அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. அதற்கு முன்னதாக அங்குள்ள கணக்க விநாயருக்கு சிறப்பு அபிஷேகம் புதன்கிழமை நடைபெற்றது.
பால், தயிா், பன்னீா், சந்தனம், மஞ்சள் உள்ளிட்டவற்றை கொண்டு விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை மற்றும் காஞ்சி சங்கர மட அன்னாபிஷேக கமிட்டியினா் செய்து வருகின்றனா்.