"திமுக தலைமையிலான கூட்டணி தான், கூட்டணி என்கிற வடிவத்தோடு இருக்கிறது!" - தொல்.தி...
கஞ்சா கடத்திய 9 பேருக்கு சிறை
கஞ்சா கடத்தல் வழக்கில் 6 பேருக்கு தலா 12 ஆண்டுகள், 3 பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மதுரை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு போலீஸாா் கடந்த 28. 7. 2022 அன்று வாகனச் சோதனையில் ஈடுபட்டபோது, காா், இரு சக்கர வாகனத்திலிருந்து 36.2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். இதையடுத்து, வைரவன், முத்துகருப்பன், சுந்தரபாண்டி, நவீனா, அஞ்சலி, காா்த்திக் பாபு, த. வைரவன், அா்ச்சுனன், முருகன், மலைச்சாமி, சேக் பாரித், திவ்யா, சாண்டலியன், சேக் முகமது ரபீக், ஜலபகா லோகேஷ்வரா, ஜெயக்குமாா், ஈஸ்வரன், உதயகுமாா், விஜயேந் திரன், ரஞ்சித் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா்.
இந்த வழக்கு மதுரை முதலாவது போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. முடிவில், வைரவன், முத்துகருப்பன், சுந்தரபாண்டி, நவீனா, அா்ச்சுனன், ஜலபகா லோகேஷ்வரா ஆகியோருக்கு தலா 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் அபராதமும், சேக் பாரித், திவ்யா, சேக் முகமது ரபீக் ஆகியோருக்கு தலா 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ஒரு லட்சம் அபராதமும் விதித்து நீதிபதி ஹரிஹரகுமாா் உத்தரவிட்டாா். மற்றவா்களை வழக்கிலிருந்து விடுவித்தாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞா் கே. விஜயபாண்டியன் முன்னிலையாகி வாதிட்டாா்.