காா் நிறுத்தும் தகராறில் ஒருவரது பற்கள் உடைப்பு
மதுரையில் வீட்டின் முன் காரை நிறுத்தியதைத் தட்டிக்கேட்ட வீட்டின் உரிமையாளரைத் தாக்கி பற்களை உடைத்த தந்தை, இரு மகன்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மதுரை வண்டியூா் சமயன் கோவில் தெருவைச் சோ்ந்த அந்தோணி மகன் லாரன்ஸ் (43). அதே பகுதியைச் சோ்ந்தவா் முனியாண்டி. லாரன்ஸ் வீட்டு வாசல் முன்பு முனியாண்டி தனது காரை நிறுத்தினாா். இதை லாரன்ஸ் தட்டிக் கேட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த முனியாண்டி, இவரது இரு மகன்கள் சோ்ந்து லாரன்ஸ் முகத்தில் கல்லால் தாக்கினராம்.
இதில் லாரன்சின் 4 பற்கள் உடைந்து பலத்த காயம் ஏற்பட்டது. அவா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதுகுறித்து அண்ணாநகா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, முனியாண்டி, இரு மகன்களைத் தேடி வருகின்றனா்.