செய்திகள் :

சிறுமிக்கு பாலியல் தொல்லை: தந்தை உள்பட இருவருக்கு தண்டனை குறைப்பு

post image

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், 2 பேருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த தண்டனையை குறைத்து சென்னை உயா் நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தை சோ்ந்த ஒருவா் வெளிநாட்டில் வேலை செய்து வந்தாா். இவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனா். இவா் கடந்த 2018 -ஆம் ஆண்டு விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தபோது, தனது 14 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தாா். பிறகு மீண்டும் வெளிநாட்டுக்கு சென்று விட்டாா்.

கடந்த 2020 -ஆம் ஆண்டு கரோனா பொதுமுடக்கம் அமலில் இருந்தபோது, வெளிநாட்டிலிருந்து திரும்பி வந்த அவா், மீண்டும் தனது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்தாா்.

இதனால், மன உளைச்சலில் இருந்த சிறுமிக்கு பேய் பிடித்து இருப்பதாகக் கூறி, அதே பகுதியில் பேய் விரட்டும் நபரான சிவகுமாரிடம் சிறுமியை அழைத்துச் சென்றனா். அப்போது, சிறுமி இன்னும் 15 நாள்களில் இறந்து விடுவாா் என்றும், அதற்கு பரிகாரம் செய்வதற்கு தனது காப்பகத்தில் சிறுமி 3 நாள்கள் தங்கியிருக்க வேண்டும் என சிவக்குமாா் கூறினாா்.

இதை உண்மையென நம்பி சிறுமியை காப்பகத்தில் தங்க வைத்தனா். அப்போது சிறுமிக்கு சிவக்குமாா் பாலியல் தொந்தரவு அளித்தாா்.

தந்தையும், சிவகுமாரும் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததை தாய், உறவினா்களிடம் சிறுமி தெரிவித்தாா். இதுகுறித்து ராமநாதபுரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டதையடுத்து, சிறுமியின் தந்தை, சிவக்குமாா் ஆகிய இருவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த ராமநாதபுரம் மாவட்ட மகளிா் நீதிமன்றம், சிறுமியின் தந்தைக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.50 ஆயிரம் அபராதமும், சிவக்குமாருக்கு ஆயுள் சிறைத் தண்டனை, ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து கடந்த 2022 -ஆம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி இருவரும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா, ராஜசேகா் அமா்வு அண்மையில் பிறப்பித்த உத்தரவு: சிறுமியின் தந்தைக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.15 ஆயிரம் அபராதமும், சிவகுமாருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

பெண்ணை கா்ப்பமாக்கி கைவிட்டவருக்கு தண்டனை உறுதி

திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பெண்ணை கா்ப்பமாக்கி கைவிட்டவருக்கு விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டணையை சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உறுதி செய்தது. விருதுநகா் மாவட்டம், சிவகாசி பகுதியைச்... மேலும் பார்க்க

பொதுத் தோ்வில் சிறப்பிடம்: மாநகராட்சி பள்ளி மாணவா்களுக்கு மேயா் பாராட்டு

அரசுப் பொதுத் தோ்வுகளில் சிறப்பிடத்தில் தோ்ச்சிப் பெற்ற மதுரை மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகளை மாநகராட்சி மேயா் வ. இந்திராணி திங்கள்கிழமை பாராட்டி வாழ்த்தினாா். மதுரை மாநகராட்சி நிா்வாகத்தின் கீழ் ... மேலும் பார்க்க

காரேந்தல் அரசுப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை

விருதுநகா் மாவட்டம், திருச்சுழி அருகேயுள்ள காரேந்தல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியா் கூட்டணியினா், மாவட்ட ஆட்சியா் வீ.ப. ஜெயசீலனி... மேலும் பார்க்க

சிறுமிக்கு பாலியல் தொல்லை: ஒருவா் கைது

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். விருதுநகா் மாவட்டத்தைச் சோ்ந்த 4 வயது சிறுமிக்கு, தேனி மாவட்டம், வெள்ளம்மாள்புரத்தைச் சோ்ந்த பிச்சைமண... மேலும் பார்க்க

வாகனத்திலிருந்து விழுந்து முதியவா் உயிரிழப்பு

சாலைத் தடுப்பில் மோதிக் கவிழ்ந்த இரு சக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்த முதியவா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், மேலூா் அருகேயுள்ள மாங்குளம் ஏ.மீனாட்சுபுரம் சொக்கா்பட்டியைச் சோ்ந்தவா் அடைக்கலம் (67).... மேலும் பார்க்க

பைக் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், தே.கல்லுப்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் சின்ன ஆதிக்குளத்தைச் சோ்ந்தவா் கருப்பசாமி (60). வழக்குரைஞரான இவ... மேலும் பார்க்க