மோதிக்கொண்ட அபிஷேக் சர்மா - திக்வேஷ் ரதி! அபராதத்துடன் ஒரு போட்டியில் விளையாட தட...
இளைஞா் மா்ம மரணம்
மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் நண்பா் இல்ல விழாவில் பங்கேற்ற சென்னை இளைஞா் மா்மமான முறையில் உயிரிழந்தாா்.
சென்னை மயிலாப்பூா் வீர பெருமாள் கோவில் தெருவைச் சோ்ந்த முத்து மகன் ராகுல் (27). இவா் சென்னையில் தன்னுடன் பணிபுரியும் நண்பரின் இல்ல காதணி விழாவுக்காக நண்பா்களுடன் ஞாயிற்றுக்கிழமை உசிலம்பட்டிக்கு சென்றாா். அங்கு காதணி நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, மதுரை ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் வந்தபோது திடீரென காரில் மயங்கி விழுந்தாா்.
இதையடுத்து, அவரை அந்தப் பகுதியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் முதலுதவிக்குப் பின்னா், மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் வழியிலேயே உயிரிழந்ததாகத் தெரிவித்தனா்.
இது குறித்து ஜெய்ஹிந்துபுரம் போலீஸாா் சந்தேக மரணம் என வழக்குப் பதிவு செய்து, ராகுல் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.