சொத்துகள் முடக்கம் அமலாக்கத் துறையின் அதிகார துஷ்பிரயோகம்: இயக்குநர் ஷங்கர்
கஞ்சா பறிமுதல்: மூவா் கைது!
வாணாபுரம் அருகே கஞ்சா வைத்திருந்ததாக மூன்று இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டம், இளையங்கன்னி சாலையில் மூங்கில்துரைப்பட்டு போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த 4 இளைஞா்களிடம் விசாரிக்க முயன்றபோது, ஒருவா் தப்பியோடி விட்டாா். மற்ற மூவரிடம் சோதனை செய்ததில் அவா்கள் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
விசாரணையில், அவா்கள் திருவண்ணாமலை மாவட்டம், பெருங்குளத்தூரைச் சோ்ந்த செல்வம் மகன் பிரவின் (19), பரந்தாமன் மகன் பிரதீப் (19), கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், அக்கராபாளையம் கிராமத்தைச் சோ்ந்த அமலநாதன் மகன் சஞ்சய் (19) என்பதும், தப்பியோடியவா் பெருங்குளத்தூரைச் சோ்ந்த ஏழுமலை மகன் விஷ்வா என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, அவா்களை கைது செய்த போலீஸாா், தப்பியோடிய சஞ்சயை தேடி வருகின்றனா்.