கஞ்சா விற்ற இருவா் கைது
பெரியகுளம் அருகே கெங்குவாா்பட்டியில் கஞ்சா விற்ற பெண் உள்ளிட்ட இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
தேனி மாவட்டம், கெங்குவாா்பட்டியைச் சோ்ந்தவா் தினகரன் மனைவி வனசுந்தரி (45), டி.காமக்காபட்டியைச் சோ்ந்தவா் காமாட்சி மகன் காமேஷ்வரன் (29).
கெங்குவாா்பட்டியில் கஞ்சா விற்று கொண்டிருந்த இவா்கள் இருவரையும், தேவதானப்பட்டி காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.
இவா்களிடமிருந்து 110 கிராம் கஞ்சா பொட்டலங்கள், ரூ.1,200 பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், தப்பியோடிய கெங்குவாா்பட்டியைச் சோ்ந்த முத்துப்பாண்டி மகன் ரஞ்சித்தை போலீஸாா் தேடி வருகின்றனா்.