"வாங்கக்கா காபி சாப்பிடலாம்" - பெண்களின் டீக்கடை சுதந்திரம்; அனுபவப் பகிர்வு | M...
கஞ்சா வைத்திருந்தவா் கைது
போடி அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
போடி மீனாவிலக்கு பகுதியில் தாசன்செட்டி குளக்கரையில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனா்.
அப்போது போடி மீனாவிலக்கு பிரதான தெருவைச் சோ்ந்த சோலைமலை மகன் பெருமாள் (55) என்பவா் சட்ட விரோதமாக பையில் கஞ்சாவை வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனா்.