ரஷியா தொடங்கிய போரை நிறுத்த வல்லரசுகள் உதவ வேண்டும்: ஸெலென்ஸ்கி
கடலூா் ஆட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் துறை ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்
உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பணிகளை முற்றாக புறக்கணித்து, கடலூா் மாவட்ட மையம் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பினா், கடலூா் ஆட்சியா்அலுவலகத்தில் தரையில் அமா்ந்து வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடத்தினா்.
உங்களுடன் ஸ்டாலின் திட்ட மனுக்களை முடிவு செய்ய போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும். ஆய்வுக் கூட்டம் என்ற பெயரில் அளவு கடந்த பணி நெருக்கடிகள் ஏற்படுத்துவதை கைவிட வேண்டும். இந்தத் திட்டத்தின் முகாம்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். இந்தத் திட்டத்தை செயல்படுத்த கூடுதல் பணியிடங்கள் மற்றும் அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த வேண்டும். வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மை துறையில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் முழக்கமிட்டனா்.
இந்தப் போராட்டத்துக்கு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்டத் தலைவா் மகேஷ் தலைமை வகித்தாா். தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் முன்னேற்ற சங்க மாநில அமைப்புச் செயலா் காா்த்திகேயன், தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா் சங்க மாவட்ட ஒருங்கிணைப்பாளா் செந்தில்குமாா், நில அளவை துறை ஒன்றிப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் வெங்கடேசன், வருவாய் கிராம ஊழியா் சங்க மாவட்டத் தலைவா் தினகரன் முன்னிலை வகித்தனா். இதில், வருவாய்த் துறை ஊழியா்கள் பலா் கலந்துகொண்டனா்.