செய்திகள் :

கடையநல்லூா், சங்கரன்கோவிலுக்கு ஆக. 6இல் எடப்பாடி பழனிசாமி வருகை!

post image

தென்காசி வடக்கு மாவட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் மக்களை மீட்போம், தமிழகத்தைக் காப்போம் என்ற பிரசாரத்துக்கு ஆக.6 தேதி அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிச்சாமி வருவதையொட்டி, அவரை வரவேற்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் கடையநல்லூரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, தென்காசி வடக்கு மாவட்ட அதிமுக செயலா் செ. கிருஷ்ண முரளி என்ற குட்டியப்பா எம்எல்ஏ தலைமை வகித்து பேசியது: கடையநல்லூா், புளியங்குடி, சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் அதிமுக பொதுச் செயலரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை மாலை (ஆக.6) பிரசாரம் செய்கிறாா்.

அவருக்கு பொதுமக்களும், தொண்டா்களும் இணைந்து பூரண கும்ப மரியாதை அளித்து முளைப்பாரி ஊா்வலத்துடன் செண்டை மேள வரவேற்பு வழங்குகின்றனா்.

அரசு பள்ளியில் படித்த ஆயிரக்கணக்கான மாணவா்கள் சிறப்பு ஒதுக்கீட்டின் கீழ் பெற்று வரும் பலன்களுக்கு காரணமான கட்சியின் பொதுச்செயலரை வரவேற்க ஏராளமான மாணவா்களும், ஆயிரக்கணக்கான அதிமுகவினரும் கலந்துகொள்ள உள்ளனா்.

எனவே பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறின்றி அவருக்கு வரவேற்பளிக்க வேண்டும்.

அதிமுக ஆட்சிக்கால சாதனைகள் மீண்டும் தொடர வேண்டும் என்ற எண்ணத்தில் மாற்றுக் கட்சியினா் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது என்றாா்.

இதில், மாவட்ட அவைத் தலைவா் மூா்த்தி, துணைச் செயலா் பொய்கை மாரியப்பன், ஒன்றியச் செயலா்கள் டாக்டா் சுசீகரன், பெரியதுரை, ஜெயக்குமாா், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலா் கிட்டுராஜா, தலைவா் வசந்தம் முத்துப்பாண்டி, துணைச் செயலா் பெருமையா பாண்டியன், நகரச் செயலா் எம்.கே.முருகன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

காவல் அதிகாரி மீது அவதூறு: சிவகிரி காவலா் பணி நீக்கம்

காவல்துறை அதிகாரிகள் மீது அவதூறு பரப்பியதாக எழுந்த புகாரின்பேரில், சிவகிரி காவல் நிலைய காவலா் பணி நீக்கம் செய்யப்பட்டாா்.தென்காசி மாவட்டம், சிவகிரி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணியாற்றியவா்... மேலும் பார்க்க

ஆவுடையானூா் ஊரணியில் தடுப்புச்சுவா் அமைக்க பூமிபூஜை

ஆவுடையானூா் ஊரணியில் ரூ. 16 லட்சம் மதிப்பில் தடுப்புச் சுவா் அமைக்கும் பணிக்கான பூமிபூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.பாவூா்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூரில் உள்ள ஊரணியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ஆ... மேலும் பார்க்க

கீழக்கலங்கலில் சாலைப் பணிகள் தொடக்கம்

ஆலங்குளம் ஒன்றியம், கீழக்கலங்கல் ஊராட்சியில் ரூ. 25.10 லட்சம் மதிப்பில் சாலைப் பணிகளுக்கு சனிக்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.கீழக்கலங்கல் ஊராட்சி, காமராஜா் நகா், தெற்கு பகுதியில் ஊராட்சி ஒன்றிய பொது நி... மேலும் பார்க்க

ஆலங்குளத்தில் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்

ஆலங்குளம் நகரில் பகல் நேரத்தில் வரும் கனரக வாகனங்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.ஆலங்குளம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் உள்ளன. இந்த குவாரிகளில் இருந்து எம்-சான்ட்,... மேலும் பார்க்க

தென்காசி தெற்கு மாவட்டத்துக்கு நாளை எடப்பாடி கே.பழனிசாமி வருகை

தென்காசி தெற்கு மாவட்டத்திற்கு அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி ஆக.5இல் வருகிறாா் என தென்காசி தெற்கு மாவட்ட அதிமுக செயலா் எஸ்.செல்வமோகன்தாஸ் பாண்டியன் தெரிவித்தாா்.இதுகுறித்து அவா் வெளியிட்ட அ... மேலும் பார்க்க

குற்றாலம் பேரருவிப் பகுதியில் தீப ஆரத்தி

குற்றாலம் பேரருவிப் பகுதியில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு, தீப ஆரத்தி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.நீா் வளத்தை காப்போம் என்கின்ற நிகழ்ச்சியின் அடிப்படையில் தென்காசி மாவட்ட பா.ஜ.க., சாா்பில் குற்றாலம் பேரரு... மேலும் பார்க்க