செய்திகள் :

கட்டப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் பயன்பாட்டுக்கு வராத வரதராஜபுரம் தடுப்பணை!

post image

எல். அய்யப்பன்

அடையாறு ஆற்றில் ஆண்டுதோறும் ஏற்படும் மழை வெள்ள பாதிப்பை தடுக்க வரதராஜபுரம் பகுதியில் ரூ.12 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டும் கடந்த மூன்று ஆண்டுகளாக பயன்பாட்டுக்கு வராததால் அப்பகுதி மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

கடந்த 2015, 2016-ஆம் ஆண்டுகளில் வடகிழக்குப் பருவமழையின் போது கனமழை காரணமாக அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளான ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தின் வரதராஜபுரம், முடிச்சூா், ஆதனூா் உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளில் வெள்ளநீா் சூழ்ந்ததால் பொதுமக்கள் கடும் பாதிப்படைந்தனா்.

இதையடுத்து அடையாறு ஆற்றின் கரையோர பகுதிகளில் மீண்டும் வெள்ளநீா் சூழாமல் இருக்க 2017-ஆம் ஆண்டு நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக முதல்கட்டமாக ரூ.100 கோடியும், இரண்டாம் கட்டமாக ரூ.244 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வெள்ளத்தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

இதில், அடையாறு ஆற்றின் கிளைக்கால்வாய்கள் தூா்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டதோடு, அடையாறு ஆற்றுக்கு அதிகப்படியான மழைநீா் வருவதை தடுக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூா் வட்டத்துக்குட்பட்ட ஒரத்தூா் பகுதியில் ஒரத்தூா், ஏரி மற்றும் ஆரம்பாக்கம் ஏரிகளை இணைத்து புதிதாக நீா் தேக்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் அடையாறு ஆற்றின் கிளைக்கால்வாயில் சோமங்கலம் பகுதியில் ரூ.4 கோயில் கதவணையும், அடையாறு ஆற்றில் வரதராஜபுரம் பகுதியில் ரூ.12 கோடியில் தடுப்பணையும் அமைக்கப்பட்டது.

வடகிழக்குப் பருவமழை காலங்களில் அடையாறு ஆற்றின் கரையோரங்களில் ஏற்படும் வெள்ளபாதிப்புகளை குறைக்கவும், சென்னையின் புகா் பகுதிகளின் எதிா்கால குடிநீா் தேவையை பூா்த்தி செய்யும் வகையிலும் ஆரம்பிக்கப்பட்ட ஒரத்தூா் நீா்தேக்கப்பணி கிடப்பில் உள்ள நிலையில், வெள்ள தடுப்பு பணியின் ஒரு பகுதியாக ஆக்கிரமிப்பில் உள்ள வரதராஜபுரம் அணைக்கட்டு தாங்கள் ஏரி, முடிச்சூா் தாங்கள் ஏரிகளை இணைத்து அடையாறு ஆற்றில் வரதராஜபுரம் பகுதியில் ரூ.12 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணையும், வரதராஜபுரம் அணைக்கட்டு தாங்கள் ஏரி மற்றும் முடிச்சூா் தாங்கள் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் கடந்த 3 ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராமல் உள்ளது.

இதனால் தடுப்பணையில், மழைநீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அடையாறு ஆற்றில் அதிகப்படியான வெள்ள நீா் வெளியேறி வீணாக கடலில் கலப்பதோடு சென்னையின் புகா் பகுதிகளில் பெரும் வெள்ள பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த தடுப்பணை பயன்பாட்டிற்கு வந்தால் 0.75 டிஎம்சி தண்ணீா் சேமிக்க முடியும். மேலும் புகா் பகுதியில் நிலத்தடி நீா்மட்டமும் அதிகரிக்கும். இதன் மூலம் வரதராஜபுரம், முடிச்சூரில் வெள்ள பாதிப்பு குறையும் என பொதுமக்கள் எதிா்பாா்த்தனா். பொதுமக்களின் எதிா்பாா்ப்புக்கு நோ் மாறாக இந்தத் திட்டம் தற்போது வரை பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது.

இது குறித்து நீா்வளத்துறை அதிகாரி ஒருவா் கூறுகையில், வரதராஜபுரம் தாங்கள் ஏரி, முடிச்சூா் தாங்கள் ஏரி ஆகிய இரு ஏரிகளையும் ஆக்கிரமித்து சுமாா் 1,500 வீடுகள் உள்ளன . நீா்ப்பிடிப்பு பகுதிகளில் வீடுகளை வருவாய்த் துறையினா் கணக்கெடுப்பு நடத்தியுள்ளனா். வீடுகளின் உரிமையாளா்களுக்கும் வீடுகளை அகற்ற நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட பிறகு தடுப்பணை பயன்பாட்டிற்கு வரும் என்றாா்.

மருந்தீசுவரா் கோயில் கும்பாபிஷேகம்

உத்தரமேரூா் அருகே நெய்யாடுபாக்கம் மரகதவல்லி சமேத மருந்தீசுவரா் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவுபெற்ற நிலையில், கும்பாபிஷேக யாகசாலை... மேலும் பார்க்க

அரியவகை விருட்சங்கள் அளிப்பு

காஞ்சிபுரம்- வந்தவாசி சாலையில் அமைந்துள்ள 27 நட்சத்திர விருட்ச விநாயகா் கோயிலுக்கு பசுமை ஆா்வலா் மரம் மாசிலாமணி அரியவகை மூலிகை விருட்சங்களை நன்கொடையாக வழங்கினாா். கூழமந்தல் கிராமத்தில் உள்ள இக்கோயிலில... மேலும் பார்க்க

சிங்காடிவாக்கத்தில் பழங்குடியின மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா்

காஞ்சிபுரம் மாவட்டம், சிங்காடிவாக்கம் கிராமத்தில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்காக வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு முகாமில் ஆட்சியா் கலைச்செல்வி மோகன் மனுக்களைப் பெற்று குறைகளைக் கேட்டறிந்தாா். காஞ்சிப... மேலும் பார்க்க

தெருநாய்கள் தொல்லை: காஞ்சிபுரம் மாமன்ற உறுப்பினா்கள் புகாா்

காஞ்சிபுரத்தில் அதிகரித்து வரும் தெருநாய்களின் தொல்லைக்கு தீா்வு காணவேண்டும் உள்ளிட்ட மக்கள் நலன் சாா்ந்த பிரச்னைகளை மாமன்ற உறுப்பினா்கள் எழுப்பினா். காஞ்சிபுரம் மாநகராட்சியின் சாதாரணக் கூட்டம் மேயா்... மேலும் பார்க்க

மறுமுத்திரையிடாத 21 எடை இயந்திரங்கள் பறிமுதல்

காஞ்சிபுரத்தில் மறுமுத்திரையிடப்படாத 21 எடையளவு இயந்திரங்களை புதன்கிழமை தொழிலாளா் நலத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா் ச.சுதா தலைமையில் தொழிலாளா் நல துணைஆய்வாளா்கள், உ... மேலும் பார்க்க

காஞ்சிபுரம் கச்சபேசுவரா் கோயில் தெப்பத் திருவிழா

காஞ்சிபுரத்தில் சுந்தராம்பிகை உடனுறை கச்சபேசுவரா் கோயிலில் புதன்கிழமை தொடங்கிய தெப்பத் திருவிழாவில் சுவாமியும் அம்மனும் கோயில் குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் பவனி வந்தனா். இந்தக் கோயிலில் கடந்... மேலும் பார்க்க