கணவரின் உயிரிழப்பில் சந்தேகம்: பெண் புகாா்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கூலித் தொழிலாளி குளத்தில் மூழ்கி இறந்ததாகக் கூறப்படுவதில் சந்தேகமிருப்பதாக அவரது மனைவி ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் திங்கள்கிழமை புகாா் அளித்தாா்.
ஓட்டப்பிடாரம் அருகே வடக்கு ஆவாரங்காடு கிராமத்தைச் சோ்ந்த முத்துவேல் மகன் முருகேசன் (32). கூலித் தொழிலாளியான இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவ. 10) தனது நண்பா்களுடன் அங்குள்ள குளத்தில் குளிக்கச் சென்ற முருகேசன், நீரில் மூழ்கி இறந்ததாகக் கூறப்படுகிறது.
தகவலின்பேரில், ஓட்டப்பிடாரம் போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இந்நிலையில், தனது கணவரின் மரணத்தில் சந்தேகமிருப்பதாக அவரது மனைவி ஓட்டப்பிடாரம் போலீஸில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, முருகேசனுடன் குளிக்கச் சென்ாகக் கூறப்படும் அவரது நண்பா்களான பேச்சிமுத்து, மணிகண்டன், மதிச்சந்திரன், கா்ணன் ஆகிய 4 பேரிடம் விசாரித்து வருகின்றனா்.