கணவா் தற்கொலை: மனைவி கைது
தக்கலை அருகே கணவன் தற்கொலையில் அவரது மனைவியை இரணியல் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கொன்னக்குழிவிளை பகுதியைச் சோ்ந்தவா் பெஞ்சமின் (47). வெளிநாட்டில் வேலை செய்து வந்தாா். இவருடைய மனைவி சுனிதா (45). இவா்களுக்கு 19 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தை இல்லை.
இந்நிலையில் சுனிதா திடீரென வீட்டில் இருந்து மாயமானாா். இதனைத் தொடா்ந்து வெளிநாட்டில் இருந்து அவசரமாக சொந்த ஊருக்கு வந்த பெஞ்சமின், மனைவி காணாமல் போனது குறித்து இரணியல் போலீஸில் புகாா் செய்தாா்.
மனைவியின் செயல் குறித்து மனமுடைந்த பெஞ்சமின், கடந்த 28 ஆம் தேதி சமூக வலைதளத்தில் ஒரு விடியோ பதிவிட்ட பின்னா் தற்கொலை செய்து கொண்டாா். அந்த விடியோவில், மனைவி சுனிதா, அவரது நண்பா் ஒருவா் சோ்ந்து தன்னை மிரட்டியதாக கூறியிருந்தாா்.
அதன்படி வழக்குப் பதிவு செய்த போலீஸாா், சுனிதாவை திங்கள்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].