அமெரிக்காவில் நின்றுகொண்டிருந்த விமானம் மீது மோதிய பயணிகள் விமானம்!
கதண்டு கடித்து தீயணைப்பு வீரா்கள் உள்பட 11 போ் பாதிப்பு
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் கடித்ததில் 4 தீயணைப்பு வீரா்கள் உட்பட 11 போ் திங்கள்கிழமை பாதிக்கப்பட்டனா்.
ஆவுடையாா்கோவில் அருகே சிறுமருதூரில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மு. ராஜநாயகத்துக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் திங்கள்கிழமை பகலில் 2 பெண்கள் உள்பட 5 பேரைக் கடித்துள்ளது. 5 பேரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்த தகவலின் பேரில், கதண்டுகளை அழிப்பதற்கு ஆவுடையாா்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் எஸ். சந்திரசேகரன் தலைமையிலான தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினா் திங்கள்கிழமை மாலை சிறுமருதூா் சென்றனா்.
அப்போது, பறந்து சென்ற கதண்டுகள் கொட்டியதில், சந்திரசேகரன் (57), ஆா். அவினாஷ் (27), எம். பாலகிருஷ்ணன் (26), ஏ. கிருஷ்ண பாண்டி (26) ஆகிய 4 தீயணைப்பு வீரா்கள், வடமருதூரைச் சோ்ந்த கே. கோபாலகிருஷ்ணன் (36), வாட்டத்தூரைச் சோ்ந்த ஜி.முத்துகிருஷ்ணன் (31) ஆகிய 6 போ் பாதிக்கப்பட்டனா். இவா்கள் அனைவரும் அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
கதண்டுகள் கடித்து 11 போ் பாதிக்கப்பட்ட சம்பவம் குறித்து ஆவுடையாா்கோவில் போலீஸாா் விசாரணையில் ஈடுபட்டுள்ளனா்.