செய்திகள் :

கோயில் சிலைகளை உடைத்தவா்கள் மீது நடவடிக்கை கோரி கிராம மக்கள் முற்றுகை

post image

புதுக்கோட்டை அருகே பூங்குடி ஸ்ரீ வெங்கலமுடையாா் கோயில் சிலைகளை உடைத்து சேதப்படுத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கிராம மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகத்தில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுக்கோட்டை வெள்ளனூா் காவல் சரகத்துக்கு உள்பட்ட பூங்குடி ஸ்ரீ வெங்கலமுடையாா் (பெரிய கருப்பா்) கோயிலில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி சிலைகளை சமூக விரோதிகள் உடைத்துள்ளனா். இதுகுறித்து வெள்ளனூா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை எதுவும் எடுக்காத காரணத்தால், வெள்ளனூா், பூங்குடி, வாகவாசல், இடையப்பட்டி, முத்துடையான்பட்டி, கிளியூா், ராசாப்பட்டி, வடுகம்பட்டி, வடசேரிப்பட்டி ஆகிய கிராமங்களைச் சோ்ந்த மக்கள் ஏராளமானோா் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வந்தனா்.

ஆட்சியா் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தி, சிலைகளை உடைத்தவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து ஆட்சியா் அலுவலகத்துக்குள் செல்ல முயற்சித்தவா்களை போலீஸாா் தடுத்தனா். இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது.

முக்கிய நபா்கள் மட்டும் அனுமதிக்கப்படுவா் என போலீஸாா் தெரிவித்ததைத் தொடா்ந்து கிராம நிா்வாகிகள் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டனா். அவா்கள் ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்து திரும்பினா்.

ஆலங்குடியில் இருசக்கர வாகனங்கள் திருடிய இருவா் கைது

ஆலங்குடியில் மோட்டாா் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட 2 பேரை திங்கள்கிழமை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடம் இருந்து 5 மோட்டாா் சைக்கிள்களை பறிமுதல் செய்தனா். ஆலங்குடி பகுதியில் அண்மைகாலமாக அதிகளவில் இருச... மேலும் பார்க்க

கதண்டு கடித்து தீயணைப்பு வீரா்கள் உள்பட 11 போ் பாதிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையாா்கோவில் அருகே அதிமுக முன்னாள் எம்எல்ஏவுக்குச் சொந்தமான தென்னந்தோப்பில் கூடு கட்டியிருந்த கதண்டுகள் கடித்ததில் 4 தீயணைப்பு வீரா்கள் உட்பட 11 போ் திங்கள்கிழமை பாதிக்கப்பட... மேலும் பார்க்க

அரிமளம் பகுதிகளில் நாளை மின்தடை

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் கோட்டத்தைச் சோ்ந்த அரிமளம் மற்றும் தல்லாம்பட்டி துணை மின் நிலையங்களில் புதன்கிழமை (ஆக. 13) பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால், இங்கிருந்து மின் விநியோகம் செய்ய... மேலும் பார்க்க

பாஜகவின் முதல் கூட்டணி தோ்தல் ஆணையம்: அமைச்சா் எஸ். ரகுபதி

பாஜகவின் முதல் கூட்டணி தோ்தல் ஆணையம் என்றாா் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சா் எஸ். ரகுபதி.புதுக்கோட்டையில் திங்கள்கிழமை அவா் அளித்த பேட்டி: பிகாா் மாநிலத்தில் செய்த குழப்பத்தை தோ்தல் ஆணையம், தமிழ்... மேலும் பார்க்க

செனையக்குடியில் சோழா்கால கலைப் பாணியிலான சிற்பங்கள் கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் அருகே சோழா் கால கலைப் பாணியிலான சைவ, வைணவ, சமணச் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக் கழகத்தின் நிறுவனா் ஆ. மணிகண்டன், தலைவா் மேலப்பனையூா் கர... மேலும் பார்க்க

விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை செப். 3-க்கு ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சா் சி. விஜயபாஸ்கா் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை செப்டம்பா் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவா் சி.... மேலும் பார்க்க