டிரம்ப்புக்கு சீனா பதிலடி: அமெரிக்க பொருள்கள் மீது 34% கூடுதல் வரி
கத்தரியில் நாற்று நோ்த்தி: வேளாண் மாணவிகள் செயல்விளக்கம்
கிள்ளிக்குளம் வ.உ.சிதம்பரனாா் வேளாண்மைக் கல்லூரி ஆராய்ச்சி நிலைய மாணவிகள் சிவந்திபுரத்தில் சூடோமோனாஸ் மூலம் கத்தரியில் நாற்று நோ்த்தி செய்வது குறித்து விளக்கம் அளித்தனா்.
இக்கல்லூரியின் இளநிலை இறுதியாண்டு மாணவிகள் அக்ஷயா, அஸ்வினி, தனலட்சுமி, கௌசல்யா, நந்திதா, பிரக்யா, சொா்ணலதா, சுவாதி ஆகியோா் விக்கிரமசிங்கம் பகுதியில் கிராமப்புற வேளாண் களப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனா்.
அதன் ஒருபகுதியாக, சிவந்திபுரத்தைச் சோ்ந்த விவசாயி விஜயக்குமாா் பொன்ராஜ் என்பவரது தோட்டத்தில் கத்தரி நாற்றுகளை சூடோமோனாஸ் நுண்ணுயிா் உரத்தில் நனைத்து நடவுசெய்வதன் மூலம் மண் மற்றும் விதைகளின் மூலம் பரவும் நோய்களை தடுப்பது குறித்துசெயல் விளக்கம் அளித்தனா்.