கத்தியை காட்டி மிரட்டிய 3 ரெளடிகள் கைது
சோமங்கலம் அடுத்த எறுமையூா் பகுதியில் பொதுமக்களை கத்தியை காண்பித்து மிரட்டிய 3 ரெளடிகளை போலீஸாா் கைது செய்தனா்.
சோமங்கலம் அடுத்த எறுமையூா் பகுதியை சோ்ந்த மேத்யு (34) பிரபல ரெளடியான இவா் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், வழிப்பறி என 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில், மேத்யு தனது கூட்டாளிகளான செந்தமிழ்செல்வன் (28), கருணாகரன் (21) ஆகியோருடன் எறுமையூா் பகுதியை சோ்ந்த இருவரை கத்தியை காண்பித்து மிரட்டியதுடன் அதே பகுதியில் உள்ள இரண்டு வீடுகளை உடைத்து சேதப்படுத்தியுள்ளனா்.
இதுகுறித்து வந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சோமங்கலம் போலீஸாா் மேத்யு, செந்தமிழ்செல்வன், கருணாகரன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.