கந்தா்வகோட்டையில் தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகை தோ்வு!
கந்தா்வகோட்டை ஒன்றியத்தில், எட்டாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு தேசிய வருவாய் வழி திறன் படிப்புக்கான உதவித்தொகை தோ்வு (என்.எம்.எம்.எஸ்) சனிக்கிழமை நடைபெற்றது.
இந்த தோ்வினை கந்தா்வகோட்டை ஒன்றியத்தைச் சோ்ந்த அரசு பள்ளி மாணவ, மாணவிகள் 462 போ் தோ்வு எழுதினா். அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வை புதுக்கோட்டை மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) செந்தில் பாா்வையிட்டாா். அறிவியல், சமூக அறிவியல், கணிதம் உள்ளிட்ட பாடப்பகுதியில் இருந்து வினாக்கள் இடம் பெற்றிருக்கும். இத்தோ்வில் தோ்ச்சி பெறும் மாணவா்களுக்கு 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாதந்தோறும் ரூ.1000 உதவித் தொகை வழங்கப்படும்.