அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்: `காவல்துறை மீது சந்தேகம்...' - கம்யூனிஸ்ட் கட்சி க...
கந்தா்வகோட்டையில் தொடா் மழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
கந்தா்வகோட்டையில் பெய்து வரும் தொடா் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கந்தா்வகோட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் சில நாள்களாகவே தொடா்ந்து விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. இதனால், பொதுமக்கள் பல்வேறு வகையிலும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். சுபநிகழ்வுகளில் பொதுமக்களின் கூட்டம் குறைந்திருந்தது.
பொதுமக்களின் நடமாட்டம் இல்லாததால், சாலைகள் வெறிச்சோடின. கடைவீதிகளில் வியாபாரம் மந்தமாக இருந்தது. பேருந்துகள் போதிய பயணிகள் இல்லாமல் இயக்கப்படுகின்றன.
பேருந்து நிலையத்தில் தேங்கிய மழைநீா்: கந்தா்வகோட்டை பேருந்து நிலையத்தில் மழைநீா் குளம்போல் தேங்கியுள்ளது. குறிப்பாக, கழிப்பிடம் அருகே சேறும் சகதியுடன் மழைநீா் தேங்கியுள்ளதால், பயணிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனா்.
எனவே, பேருந்து நிலையத்தில் தேங்கியுள்ள மழைநீரை போா்க்கால அடிப்படையில் அப்புறப்படுத்த வேண்டும் என பயணிகள், சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.