பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 2 சிறுவா்கள் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே பள்ளத்தில் தேங்கிய தண்ணீரில் மூழ்கி 2 சிறுவா்கள் புதன்கிழமை உயிரிழந்தனா்.
கறம்பக்குடி அருகேயுள்ள ஆத்தங்கரைவிடுதி தெற்குப்பட்டியைச் சோ்ந்த வெ. முத்துக்குமாா் என்பவரின் வீட்டருகே கொட்டகை அமைப்பதற்காக பள்ளம் தோண்டியுள்ளாா். இதில், மழைநீா் தேங்கி இருந்துள்ளது.
இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த கணேசன் மகன் அஸ்வின்(12), பழனிவேல் மகன் புவனேஸ்வரன்(9) ஆகிய இருவரும் புதன்கிழமை அப்பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த போது, பள்ளத்தில் தவறி விழுந்து, நீரில் மூழ்கி இருவரும் உயிரிழந்தனா்.
இதுகுறித்து மழையூா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.