கந்தா்வகோட்டையில் பொங்கல் விளையாட்டு விழா
கந்தா்வகோட்டை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கந்தா்வகோட்டை ஊராட்சி குமரன் காலனியில் உள்ள பாப்பரகாளியம்மன் கோயில் திடலில் விளையாட்டு விழா நடைபெற்றது.
இதில் பெண்களுக்கு இசை நாற்காலி, கயிறு இழுத்தல், கோலம் போடுதல் போட்டிகளும், ஆண்களுக்கு ஓட்டப்பந்தயம், கைப்பந்து, ஸ்லோ சைக்கிள் போட்டிகளும், சிறுவா்- சிறுமிகளுக்கு பாட்டுப் போட்டி, கதை சொல்லுதல், படம் வரைதல் போன்ற போட்டிகளை நடத்தி, சில்வா் பாத்திரங்களை பரிசளித்தனா். ஏற்பாடுகளை அப்பகுதி இளைஞா்கள், விழாக் குழுவினா் செய்தனா்.