பொய் வழக்குப் போடும் போலீஸார் மீது வழக்குத் தொடர அரசு அனுமதி தேவையில்லை: உச்ச நீ...
கனமழை எச்சரிக்கை: செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றம் அதிகரிப்பு
சென்னை: வரும் வாரத்தில் சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், முன்னெச்சரிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 6,000 கன அடியாக அதிகரிப்பட்டுள்ளது.
தமிழகத்தில் டிசம்பர் 16,17,18ஆம் தேதிகளில் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே, நிரம்பும் நிலையில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதாவது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு 4500 அடியில் இருந்து 6000 ஆயிரம் கன அடி உயர்த்தப்பட்டுள்ளது.
ஏரிக்கு நீர்வரத்து 2450 கன அடியாக குறைந்துள்ள நிலையில், அணையின் மொத்த நீர்மட்டம் 24 அடி என்பதால் தற்போது 22.76 அடி அளவுக்கு நீர்மட்டம் உள்ளது. மொத்தக் கொள்ளளவு 3645 மில்லியன் கன அடி என்ற நிலையில், தற்போது 3315 மில்லியன் கன அடியாக நீர் இருப்பு உள்ளது.
எனவே, வரும் வாரத்தில் கனமழை பெய்தால் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்பதை கருத்தில் கொண்டு செம்பரம்பாக்கம் ஏரியில் முன்னெச்சரிக்கையாக உபரி நீர் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளது.