வெளிநாட்டில் இருந்து வாட்ஸ்ஆப் ‘முத்தலாக்’: கேரள இளைஞா் மீது வழக்கு
கனிமம் எடுத்துச் செல்ல இணையதளம் வாயிலாக நடைச்சீட்டு வழங்கும் முறை அமல்
தென்காசி மாவட்டத்தில், குவாரி மற்றும் சுரங்கங்களிலிருந்து எடுத்துச் செல்லப்படும் கனிமங்களை தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்துதல் மற்றும் வரன்முறைப்படுத்துவதற்கு ஏதுவாக இணைய வழியில் ( ங்-டங்ழ்ம்ண்ற்) அனுமதிச்சீட்டு வழங்கும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் வெளியிட்ட செய்திக் குறிப்புச
முதல்கட்டமாக சிறுவகை
கனிமங்களுக்கான இசைவாணைச்சீட்டு ( ஆன்ப்ந் டங்ழ்ம்ண்ற்) மட்டும் இணைய வழியில் வழங்கும் நடைமுறை செப்டம்பா் 2024 முதல் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது.
தற்போது, தென்காசி மாவட்டத்தில், அனைத்து வகை கனிமங்களையும் குவாரி மற்றும் சுரங்கங்களிலிருந்து எடுத்துச் செல்வதற்கு வழங்கப்படும் நடைச்சீட்டுகளையும் இணையவழி வாயிலாக வழங்கும் நடைமுறை பிப். 25முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, கனிம குத்தகைதாரா்கள் அனைவரும் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்து நடைச்சீட்டு பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது என்றாா் அவா்.