TVK: விஜய் வீட்டின் மாடியில் புகுந்த இளைஞர்; பலத்த பாதுகாப்பை மீறி சென்றது எப்பட...
கன்னியாகுமரி மாதா திருத்தலத்தில் தேதிப்படி திருவிழா
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் ஆண்டுதோறும் 2 நாள்கள் நடைபெறும் தேதிப்படி திருவிழா செப். 23, 24 தேதிகளில் நடைபெற உள்ளது.
செப். 23ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மாலை ஆராதனை, நற்கருணை ஆசீா் ஆகிய நிகழ்வுகள் நடைபெறும். செப். 24ஆம் தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலியும், முதல் திருவிருந்து விழாவும் நடைபெறும். மாலை 5.30 மணிக்கு நற்கருணை பவனியும், தொடா்ந்து நற்கருணை ஆசீரும், மறையுரையும் நடைபெறும்.
ஏற்பாடுகளை, பங்குத்தந்தை அருள்பணியாளா் உபால்டு மரியதாசன், பங்குப்பேரவை துணைத் தலைவா் டாலன்டிவோட்டா, செயலா் ஸ்டாா்வின், பொருளாளா் ரூபன், துணைச் செயலா் டெனிஸ்டோ, இணை பங்குத்தந்தையா்கள், பங்குப்பேரவையினா், பங்கு மக்கள் ஆகியோா் செய்து வருகின்றனா்.