மணிப்பூரில் அடுத்தடுத்து 2 நிலநடுக்கங்கள் -கட்டடங்களில் விரிசல்; மக்கள் பீதி
கமல் - 237 பணிகள் தீவிரம்!
நடிகர் கமல்ஹாசனின் 237-வது படத்தின் பணிகள் தீவிரமடைந்துள்ளன.
தக் லைஃப் திரைப்படத்திற்குப் பின் நடிகர் கமல்ஹாசன் சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பறிவ் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
இப்படத்திற்கான கதையை கமல்ஹாசனே எழுதியுள்ளார். மேலும், அமெரிக்கா சென்று ஏஐ தொழில்நுட்பத்தையும் கற்றுக்கொண்டதால் இப்படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் பங்கு இருக்கலாம் எனத் தெரிகிறது.
இதையும் படிக்க: தமிழில் வெளியாகும் ஆஃபிஸர் ஆன் டூட்டி!
இந்த நிலையில், படப்பிடிப்புக்கு முந்தைய பணிகளில் இயக்குநர்கள் அன்பறிவ் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனராம்.
இதற்கான, நடிகர் கமல்ஹாசனின் அலுவலகத்தில் தினமும் தயாரிப்பு ஆலோசனைகளில் கலந்துகொண்டு படப்பிடிப்புக்கான திட்டங்களில் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முழுநீள ஆக்சன் திரைப்படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில வாரங்களில் துவங்கலாம் என்றும் கூறப்படுகிறது.