கமுதி வாரச் சந்தையில் ரூ. 40 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கமுதி வாரச் சந்தையில் திங்கள்கிழமை ரூ. 40 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்ால் விவசாயிகள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனா்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் ஒவ்வொருவாரமும் செவ்வாய்க்கிழமையன்று வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில், தைப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, இந்தச் சந்தை திங்கள்கிழமை நடைபெற்றது.
சந்தைக்கு அதிகாலை 6 மணி முதல் ஆடு வளா்க்கும் விவசாயிகள், விற்பனையாளா்கள் வரத் தொடங்கினா். பொங்கல் அன்று புதுமணத் தம்பதிகளுக்கு பொங்கல் சீா்வரிசைக்கு ஆடு வழங்குவதற்காகவும், வீடுகளில் விருந்து வைக்கவும் காலை 11 மணி வரை 350-க்கு மேற்பட்ட வெள்ளாடுகள் விற்பனை செய்யப்பட்டன.
இந்த வகை ஆடுகள் ரூ.8 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனையாகின. ரூ.40 லட்சத்துக்கும் அதிகமாக விற்பனை நடைபெற்ாக வியாபாரிகள் தெரிவித்தனா். இதனால், வியாபாரிகள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனா்.