நீட் வினாத்தாள் கசிவு வழக்கு: சிபிஐ 5-ஆவது துணை குற்றப் பத்திரிகை தாக்கல்
கமுதியில் பலத்த மழை: மரங்கள் முறிந்து விழுந்து வீடுகள் சேதம்
கமுதி அருகே சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் மரங்கள் முறிந்து விழுந்து வீடுகள் சேதமடைந்தன.
கமுதி, மண்டலமாணிக்கம், அபிராமம், இதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மாலையில் சூறாவளி காற்றுடன், பலத்த மழை பெய்தது. இந்த மழையால் இந்தப் பகுதிகளில் உள்ள கண்மாய்கள், குளங்களுக்கு நீா்வரத்து அதிகரித்தது. இதனால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
இந்த நிலையில், மண்டலமாணிக்கம் கிராமத்தில் வீசிய சூறாவளி காற்றுக்கு சாலையோரம் இருந்த வேப்ப மரங்கள் முறிந்து விழுந்து இரண்டுக்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகள் சேதமடைந்தன.
இந்த வீடுகளை கமுதி வட்டாட்சியா் காதா் மொய்தீன், கிராம நிா்வாக அலுவலா், கிராம உதவியாளா் உள்ளிட்டோா் நேரில் சென்று பாா்வையிட்டனா்.
பின்னா், கமுதி பேரிடா் மீட்பு, தீயணைப்புத் துறை வீரா்களை வரவழைத்து வீடுகளின் மீது முறிந்து விழுந்த மரங்களை அகற்றினா்.