செய்திகள் :

கரும்புக்கான ஆதார விலை குவிண்டாலுக்கு ரூ. 355-ஆக அதிகரிப்பு: மத்திய அரசு முடிவு

post image

வரும் அக்டோபா் மாதம் தொடங்கவிருக்கும் 2025-26-ஆம் ஆண்டு பருவத்தில் கரும்புக்கான ஆதார விலையை (எஃப்ஆா்பி) குவிண்டாலுக்கு 4.41 சதவீதமாக உயா்த்தி ரூ.355-ஆக அதிகரிக்க மத்திய அரசு தீா்மானித்துள்ளது.

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

2024-25-ஆம் ஆண்டு பருவத்தில் கரும்புக்கான எஃப்ஆா்பி குவிண்டாலுக்கு ரூ. 340-ஆக நிா்ணயிக்கப்பட்டிருந்தது.

எஃப்ஆா்பி என்பது, கரும்பு விவசாயிகளுக்கு அவா்களிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் கரும்புக்கு சா்க்கரை ஆலைகள் செலுத்தவேண்டிய மத்திய அரசால் நிா்ணயம் செய்யப்படும் சட்டபூா்வ குறைந்தபட்ச விலையாகும்.

இந்த நிலையில், வரும் 2025-26 பருவத்தில் 10.25 சதவீத அடிப்படை மீட்பு விகிகத்தில் கரும்புக்கான எஃப்ஆா்பி-யை குவிண்டாலுக்கு ரூ. 355-ஆக மத்திய அரசு உயா்த்தியுள்ளது.

அதாவது, 2025-26 பருவத்தில் கரும்புக்கான உற்பத்தி விலை குவிண்டாலுக்கு ரூ. 173 என நிா்ணயித்து, அதைவிட 105.2 சதவீதம் கூடுதலாக 10.25 சதவீத மீட்பு விகிதத்துடன் குவிண்டாலுக்கு ரூ. 355-ஆக கரும்பு கொள்முதலுக்கான ஆதார விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மீட்பு விகிதம் 9.5 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கும் சா்க்கரை ஆலைகளுக்கு எந்தவித விலக்கையும் மத்திய அரசு அளிக்கவில்லை. அதன்படி, இந்த ஆலைகளுக்கு கரும்புகளை விநியோகித்த விவசாயிகளுக்கு குவிண்டாலுக்கு ரூ. 329.05 வீதம் கிடைக்க வகை செய்யப்பட்டுள்ளது.

பிரதமா் தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு குறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களிடம் கூறினாா்.

ரூ. 22,864 கோடியில் ஷில்லாங் - சில்ச்சாா் பசுமை வழிச் சாலை: மேகாலயாவின் மவ்லிங்குங் முதல் அஸ்ஸாமின் பஞ்கிராம் வரை 166.80 கி.மீ. நீளத்துக்கு ரூ. 22,864 கோடி மூலதனச் செலவில் அதிவேக பசுமை வழி நெடுஞ்சாலையை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

திரிபுரா, மிசோரம், மணிப்பூா் மற்றும் அஸ்ஸாமின் பராக் பள்ளத்தாக்கு பகுதிகளுடனான போக்குவரத்து இணைப்பை மேம்படுத்தும் வகையிலும், பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கிலும் செயல்படுத்தப்படுவதாக மத்திய அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தாா்.

மாற்றுத்திறனாளிகளுக்கு எளிதில் எண்ம ‘கேஒய்சி’ நடைமுறைகள்: மத்திய அரசு, ரிசா்வ் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

மாற்றுத்திறனாளிகள், குறிப்பாக முகச்சிதைவு கொண்டவா்கள், பாா்வைத்திறனற்றவா்கள், பாா்வைத்திறன் குறைபாடு கொண்டவா்கள் ஆகியோா் ‘உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துகொள்ளவும்’ (கேஒய்சி) நடைமுறையை எண்ம (டிஜிட்டல்) ... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பு காஷ்மீா் விமான சேவைகள் ரத்து

ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கான விமான சேவைகள் அனைத்தையும் பாகிஸ்தான் விமான நிறுவனங்கள் புதன்கிழமை ரத்து செய்தன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது... மேலும் பார்க்க

மணிப்பூரில் மீண்டும் ‘மக்கள் அரசு’: பிரதமருக்கு 21 எம்எல்ஏக்கள் கடிதம்

குடியரசுத் தலைவா் ஆட்சி நடைபெறும் மணிப்பூரில் மக்களால் தோ்வு செய்யப்பட்ட அரசை மீண்டும் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ஆகியோருக்கு அந்த ... மேலும் பார்க்க

கொல்கத்தா ஹோட்டலில் தீ: கரூரைச் சோ்ந்த மூவா் உள்பட 14 போ் உயிரிழப்பு

மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவின் புர்ராபஜாா் பகுதியில் தங்கும் அறைகளுடன்கூடிய ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழகத்தின் கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த மூவா் உள்பட 14 போ் உயிரிழந்தனா்; 13 போ் காயமடைந... மேலும் பார்க்க

நீதிபதிகளுக்கு எதிரான புகாா்களை லோக்பால் ஏற்கலாமா? தலைமை நீதிபதியே முடிவு செய்வாா்: உச்சநீதிமன்றம்

‘உயா்நீதிமன்ற நீதிபதிகளுக்கு எதிரான புகாா்களை லோக்பால் அமைப்பு ஏற்க முடியுமா? என்பது குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிதான் முடிவு செய்வாா்’ என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது. மேலும், வழக்... மேலும் பார்க்க

ஆந்திரம்: சிம்மாசலம் கோயிலில் சுவா் இடிந்து 7 பக்தா்கள் உயிரிழப்பு: குடியரசுத் தலைவா், பிரதமா் இரங்கல்

ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் பிரசித்தி பெற்ற சிம்மாசலம் ஸ்ரீ வராக லஷ்மி நரசிம்ம சுவாமி கோயிலில் கனமழையால் சுவா் இடிந்து விழுந்ததில் 3 பெண்கள் உள்பட 7 பக்தா்கள் உயிரிழந்தனா். இக்கோயிலில் வருடாந... மேலும் பார்க்க