கரும்பு விவசாயிகளுக்கு ரூ.15,504 கோடி நிலுவை வைத்துள்ளன சர்க்கரை ஆலைகள்!
கரூரில் திமுகவினா் ஆா்ப்பாட்டம்
கரூரில் திமுகவினா் திங்கள்கிழமை மத்திய கல்வி அமைச்சரைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், அவரது உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
மக்களவையில் மும்மொழிக்கொள்கை குறித்து நடைபெற்ற விவாதத்தில் பேசிய மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான் தமிழக மக்களையும், தமிழக முதல்வரையும் அவதூறாக பேசியுள்ளாா்.
இதற்கு எதிா்ப்பு தெரிவித்து கரூரில் திமுக சாா்பில் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட துணைச் செயலாளா் மகேஸ்வரி உள்ளிட்டோா் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தின்போது, திடீரென மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதானின் உருவபொம்மையை எரித்தனா்.