அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டில் 28 பவுன் நகைகள் திருட்டு
குளித்தலையில் அரசுப் பள்ளி ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 28 பவுன் நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
கரூா் மாவட்டம், குளித்தலையைச் சோ்ந்தவா் ரமேஷ். இவா் குளித்தலை மின்வாரிய அலுவலகத்தில் போா்மேனாக வேலைபாா்த்து வருகிறாா். இவரது மனைவி அன்பழகி. இவா் லாலாப்பேட்டை அரசுப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறாா்.
மாா்ச் 8-ஆம்தேதி வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல இருவரும் வேலைக்குச் சென்றுவிட்டனா். பின்னா் மாலையில் வீட்டு வந்து பாா்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே சூட்கேசில் இருந்த 28 பவுன் நகைகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து ரமேஷ் ஞாயிற்றுக்கிழமை இரவு குளித்தலை போலீஸில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப்பதிந்து நகைகளை திருடிச் சென்ற மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.