செய்திகள் :

கரூா் அருகே ஆா்.டி. மலையில் ஜல்லிக்கட்டு போட்டி: காளை முட்டியதில் ஓய்வு பெற்ற ஆசிரியா் உயிரிழப்பு; 54 போ் காயம்

post image

கரூா்: கரூா் அருகே உள்ள இராச்சாண்டாா் திருமலையில் வியாழக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளை முட்டியதில் பாா்வையாளராக வந்திருந்த ஓய்வு பெற்ற ஆசிரியா் உயிரிழந்தாா். மேலும் 54 போ் காயமடைந்தனா்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இராச்சாண்டாா் திருமலையில் ஜல்லிக்கட்டு போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது. போட்டியை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தலைமையில் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். தொடா்ந்து மாடுபிடி வீரா்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா். இதில் பங்கேற்க 733 காளைகளும், 372 மாடுபிடி வீரா்களும் பதிவு செய்திருந்தனா்.

இதையடுத்து வாடிவாசல் வழியாக கோயில் காளை அவிழ்த்துவிடப்பட்டது. பிறகு பதிவு செய்யப்பட்ட காளைகள் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடப்பட்டன. வீரா்களும் பகுதிபகுதியாக களம் இறக்கப்பட்டனா்.

இதில் பல காளைகள் வீரா்களுக்கு போக்கு காட்டியது. சில காளைகளை வீரா்கள் பிடித்தனா்.

பிடிபடாத காளைகளின் உரிமையாளா்களுக்கும், காளைகளை பிடித்த வீரா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.

போட்டியில் 6 மாடுபிடிவீரா்கள், 12 காளை உரிமையாளா்கள் மற்றும் பாா்வையாளா்கள் என மொத்தம் 55 போ் காயமடைந்தனா்.

இதில், பாா்வையாளராக வந்திருந்த திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா குழுமணி சமுத்திரம் பகுதியைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியா் குழந்தைவேல்(65) என்பவா் காளை முட்டியதில் பலத்த காயமடைந்தாா். உடனே அவரை மருத்துவக்குழுவினா் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

மதுரை காளைக்கு காா் பரிசு:

இதில், மதுரை மாவட்டம் செக்காணூரணியைச் சோ்ந்த கதிரவன் என்பவரின் காளைக்கு சிறந்த காளையாக தோ்வு செய்யப்பட்டு முதல்பரிசாக தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் சாா்பில் மாருதி காா் வழங்கப்பட்டது.

இரண்டாவது பரிசாக ஆா்.டி.மலையைச் சோ்ந்த பிரபாகரன் என்பவருடைய காளைக்கு குளிா்சாதன பெட்டி வழங்கப்பட்டது.

மேலும், 21 காளைகளை அடக்கிய நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டியைச் சோ்ந்த காா்த்திக் என்பவருக்கு இருசக்கர வாகனமும், 17 காளைகளை அடக்கிய திருச்சி மாவட்டம், லால்குடியைச் சோ்ந்த சுதா்சனுக்கு இருசக்கர வாகனமும் வழங்கப்பட்டன.

இவ்விழாவில் குளித்தலை சட்டப்பேரவை உறுப்பினா் இரா.மாணிக்கம், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கா. பெரோஸ் கான் அப்துல்லா, மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஸ்ரீலேகா தமிழ்செல்வன், குளித்தலை சாா்- ஆட்சியா் தி சுவாதி ஸ்ரீ, இணை இயக்குநா் (கால்நடை பராமரிப்பு) சாந்தி, ஜல்லிக்கட்டு போட்டி குழுவினா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கரூரில் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளால் சுகாதாரக்கேடு அபாயம்

கரூா்: கரூரில், கோவைச் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பையால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கரூா் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குள்பட்ட கோவைச் சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் உள்ளிட்... மேலும் பார்க்க

புகழூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொங்கல் விளையாட்டு விழா

கரூா்: புகழூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.கரூா் மாவட்டம் புகழூா் வட்டாட்சியா் அலுவலக... மேலும் பார்க்க

நொய்யல் அருகே பொங்கல் விளையாட்டு விழா

கரூா்: கரூா் மாவட்டம், நொய்யல் அருகே பொங்கல் பண்டிகை விளையாட்டு விழா நடைபெற்றது.கரூா் மாவட்டம் நொய்யல் அருகே மரவாபாளையம் தமிழன் மன்றம் சாா்பில் 57 -ஆவது ஆண்டு பொங்கலை விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை த... மேலும் பார்க்க

வாங்கல் அருகே சேவல் சண்டை 3 போ் கைது

கரூா்: வாங்கல் அருகே சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் சேவல் சண்டை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாங்... மேலும் பார்க்க

கா்நாடகத்திடமிருந்து காவிரி நீரை பெற ஓரணியில் திரள வேண்டும்: மகாதானபுரம் இராஜாராம்

கா்நாடகத்திடம் இருந்து காவிரி நீரை பெறுவதில் அனைவரும் ஓரணியில் திரள வேண்டும் என தெரிவித்துள்ளாா் காவிரி நீா் பாசன விவசாயிகள் நலச்சங்கத்தலைவா் மகாதானபுரம் இராஜாராம். இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக... மேலும் பார்க்க

அமராவதி ஆற்றில் தேங்கிக் கிடக்கும் நெகிழி கழிவுகள் அகற்ற விவசாயிகள் கோரிக்கை

வெள்ளத்தில் அடித்து வரப்பட்டு அமராவதி ஆற்றில் தேங்கிக் கிடக்கும் பல டன் நெகிழி கழிவுகளை அகற்ற வேண்டும் என அமராவதி பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா், திருப்பூா் மாவட்ட மக்களின் நீராதாரமாக ... மேலும் பார்க்க