கற்றல் செயல்பாட்டில் மணற்கேணி செயலி: கல்வித் துறை அறிவுறுத்தல்
வாங்கல் அருகே சேவல் சண்டை 3 போ் கைது
கரூா்: வாங்கல் அருகே சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கரூா் மாவட்டத்தில் சேவல் சண்டை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வாங்கல் அருகே வரப்பாளையத்தில் புதன்கிழமை இரவு சிலா் சேவல் சண்டை நடத்துவதாக வாங்கல் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்திற்கு சேவல் சண்டை நடத்தி சூதாட்டத்தில் ஈடுபட்ட கரூா் வெங்கமேட்டைச் சோ்ந்த ராஜேந்திரன்(50), எம்.புதுப்பாளையத்தைச் சோ்ந்த ரவி, கடம்பங்குறிச்சியைச் சோ்ந்த தமிழரசன் ஆகிய மூன்றுபேரையும் கைது செய்தனா். மேலும் அவா்களிடம் இருந்த மூன்று இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்தனா்.