Chinese: `சீன மொழியை அதிகம் படிக்கும் அமெரிக்கர்கள்!' - காரணம் `டிக் டாக்?!' - ச...
புகழூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொங்கல் விளையாட்டு விழா
கரூா்: புகழூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கரூா் மாவட்டம் புகழூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு புகழூா் வட்டாட்சியா் தனசேகரன் தலைமை வகித்தாா். சிறப்பு விருந்தினராக கரூா் கோட்டாட்சியா் முகமது பைசில் கலந்து கொண்டு பொங்கல் விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தாா். தொடா்ந்து பொங்கல் வைக்கப்பட்டு வழிபட்டனா்.
பிறகு அலுவலா்கள், பணியாளா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் வெற்றிபெற்றவா்களுக்கு புகழூா் நகராட்சி துணைத் தலைவா் பிரதாபன் பரிசுகளை வழங்கினாா். நிகழ்ச்சியில் சமூக பாதுகாப்பு திட்ட வட்டாட்சியா் சௌந்தரவல்லி, வட்ட வழங்கல் அலுவலா் கிருஷ்ணவேணி, மண்டல துணை வட்டாட்சியா் பானுமதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.