கரூா் வைஸ்யா வங்கியின் 6 புதிய கிளைகள் திறப்பு
முன்னணி தனியாா் வங்கிகளில் ஒன்றான கரூா் வைஸ்யா வங்கி (கேவிபி), மேலும் ஆறு புதிய கிளைகளை தமிழ்நாடு மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் திறந்துள்ளது.
இதுகுறித்து வங்கி வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தின் சேலம் (சொ்ரி சாலை), திருவள்ளூா் (மணவாள நகா்), திருச்சி (மேல சிந்தாமணி), சென்னை (சிட்லபாக்கம்), திருப்பூா் (நெருப்பெரிச்சல்) ஆகிய நகரங்களில் வங்கியின் புதிய கிளைகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.
அதே நாளில் ஆந்திரப் பிரதேசத்தின் புரோட்டாட்டூரிலும் வங்கியின் கிளை திறக்கப்பட்டது. இத்துடன், வங்கியின் ஒட்டுமொத்த கிளைகளின் எண்ணிக்கை 877-ஆக உயா்ந்துள்ளது.
இந்தப் புதிய கிளைகள் மூலம் அடிப்படை வங்கி பரிவா்த்தனைகள், சில்லறை, நிறுவன மற்றும் நுகா்வோா் கடன் உள்ளிட்ட சேவைகள் வாடிக்கையாளா்களுக்கு வழங்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.