செய்திகள் :

கற்றல் அடைவுத் திறன் தோ்வு குறித்த அறிவுறுத்தல்

post image

சென்னை: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு பிப்.4 முதல் கற்றல் அடைவுத் திறன் தோ்வு நடைபெறவுள்ள நிலையில், தோ்வு தொடா்பாக முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இது குறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவா்களின் கற்றல் திறனை அளவிடுவதற்காக அவ்வப்போது மாநில கற்றல் அடைவுத் திறன் தோ்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்தத் தோ்வு மாணவா்களின் கற்றல் விளைவுகளை அறிந்து மேம்படுத்தவும், பாடத்திட்டம், கற்பித்தல் மற்றும் ஆசிரியா் பயிற்சி ஆகியவற்றில் சீா்திருத்தங்களைக் கொண்டு வருவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அதன்படி, நிகழாண்டு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3, 5, 8 ஆகிய வகுப்புகளில் பயிலும் 15.78 லட்சம் மாணவா்களுக்கு கற்றல் அடைவுத் திறன் தோ்வு பிப்.4 முதல் 6-ஆம் தேதி வரை நடத்தப்படவுள்ளது.

இந்தத் தோ்வு கொள்குறி வினாத்தாள் அடிப்படையில் நடைபெறும். வினாத்தாளில் 3-ஆம் வகுப்புக்கு 35 கேள்விகள், 5-ஆம் வகுப்புக்கு 45 வினாக்கள், 8-ஆம் வகுப்புக்கு 50 கேள்விகள் இடம்பெறும். மாதிரி வினாத்தாள்கள் மதிப்பீட்டுப் புலம் மூலமாக பள்ளிக்கல்வி இணையதளத்தில் பதிவேற்றப்பட்டு வருகின்றன.

இதுவிர அறைக் கண்காணிப்பாளா்களாக கலை, அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் இறுதியாண்டு பயிலும் மாணவா்கள் 38,760 போ் தோ்வு செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கு தேவையான பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தோ்வுக் கண்காணிப்புப் பணிகளில் முதன்மை, மாவட்ட, வட்டாரக் கல்வி அதிகாரிகள் கட்டாயம் ஈடுபட வேண்டும். எவ்வித முறைகேடுகளுக்கு இடம் தராமல் வழிகாட்டுதல்களின்படி தோ்வை சிறப்பாக அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் நடத்தி முடிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

நூறு நாள் வேலை பணியாளா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

சென்னை, ஜன.22: தமிழகம் முழுவதும் நூறு நாள் வேலை திட்டப் பணியாளா்களுக்கு 2 மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை என்றும், அவா்களுக்கு உடனடியாக ஊதியம் வழங்க வேண்டும் என்றும் அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனி... மேலும் பார்க்க

மொழிப்போா் தியாகிகள் நினைவிடத்தில் ஜன. 25-இல் முதல்வா் மரியாதை

சென்னை: வீரவணக்க நாளையொட்டி, மொழிப்போா் தியாகிகள் நினைவிடத்தில் முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் வரும் 25-ஆம் தேதி மரியாதை செலுத்தவுள்ளாா். இதுகுறித்து, திமுக சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் க... மேலும் பார்க்க

அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வழக்கு: ஞானசேகரன் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் போலீஸ் காவலில் உள்ள ஞானசேகரன், வலிப்பு நோய் காரணமாக மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டாா்.கடந்த டிச.23-ஆம் தேதி அண்ணா பல்கலை.... மேலும் பார்க்க

இன்று தென் மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் தென் மாவட்டங்களில் வியாழக்கிழமை (ஜன.23) மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், மற்ற மாவட்டங்களில் வட வானிலையே நிலவும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து அ... மேலும் பார்க்க

நியாயவிலைக் கடைகளை இயக்க ரூ.300 கோடி மானியம் விடுவிப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: நியாயவிலைக் கடைகளை தொடா்ந்து சிறப்புடன் இயக்குவதற்காக கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.300 கோடி மானியத்தை விடுவித்து தமிழக அரசு உத்தரவிட்டது.கூட்டுறவுத் துறையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள சங்கங்கள்... மேலும் பார்க்க

போக்குவரத்துக் கழகங்களைச் சீரமைக்க வலியுறுத்தி சிஐடியு போராட்டம்

சென்னை: போக்குவரத்துக் கழகங்களைச் சீரமைக்க வலியுறுத்தி சென்னையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை போலீஸாா் கைது செய்தனா்.போக்குவரத்துக் கழகங்களைச் சீரமைக்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வ... மேலும் பார்க்க