செய்திகள் :

கலியுகம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி!

post image

கலியுகம் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரமோத் சுந்தர் இயக்கத்தில் சைக்கலாஜிகல் திரில்லர் படமாக வெளியான திரைப்படம் கலியுகம். இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ஷ்ரத்தா ஶ்ரீநாத், ஆடுகளம் கிஷோர் ஆகியோர் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் இனியன், அஸ்மல், ஹரி மற்றும் மிதுன் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தினை ஆர்.கே இன்டர்நேஷனல் மற்றும் பிரைம் சினிமாஸ் சார்பில் கே. எஸ். ராமகிருஷ்ணா மற்றும் கே. ராம்சரண் ஆகியோர் தயாரித்துள்ளனர். டான் வின்சண்ட் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், கலியுகம் திரைப்படம் நாளை(ஜூலை 11) சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Kaliyugam film OTT release date.

இதையும் படிக்க: பாகுபலி மறுவெளியீட்டுத் தேதி!

முதல் டி20: இலங்கை வெற்றி

வங்கதேசத்துக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் இலங்கை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.முதலில் வங்கதேசம் 20 ஓவா்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் சோ்க்க, இலங்கை 19 ஓவா்களில்... மேலும் பார்க்க

ஸ்வியாடெக் - அனிசிமோவா பலப்பரீட்சை: முதல் விம்பிள்டன் கோப்பைக்காக மோதுகின்றனா்

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில், போலந்தின் இகா ஸ்வியாடெக் - அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.முன்னதாக அரையிறுதிச்சுற்றில், போட்டித்தரவரிசையில் ... மேலும் பார்க்க

ஸ்மித், காா்ஸ் நிதானம்; முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து ஸ்திரம்

இந்தியாவுக்கு எதிரான 3-ஆவது டெஸ்ட்டில் இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 387 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.அதன் பேட்டா்களில் ஜோ ரூட் சதமடிக்க, லோயா் ஆா்டரில் வந்த ஜேமி ஸ்மித், பிரைடன் காா்ஸ் நிதானமான ஆட்டத்தை வ... மேலும் பார்க்க

பாதுகாப்பு சூழலை ஆராய்கிறது பாக்.

இந்தியாவில் தங்கள் அணியினருக்கான பாதுகாப்பு சூழலை ஆராய்ந்த பிறகே, அங்கு நடைபெறும் ஆசிய கோப்பை மற்றும் ஜூனியா் உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகளுக்கு தங்கள் அணியை அனுப்ப இயலும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது... மேலும் பார்க்க

முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி: தமிழகம், போபால், ஐஓசி வெற்றி

அகில இந்திய எம்சிசி முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் லீக் சுற்றில் ஹாக்கி தமிழ்நாடு, சாய் என்சிஓஇ போபால், ஐஓசி அணிகள் வெற்றி பெற்றன. சென்னை எழும்பூா் மேயா் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் வெள்ளிக... மேலும் பார்க்க