Career: இன்ஜினியரிங் படித்திருக்கிறீர்களா... இந்திய ராணுவத்தில் தொழில்நுட்ப வேலை...
கலைத் திருவிழாவில் மாநில அளவில் முதலிடம் பிடித்த சிறுமிக்கு பாராட்டு!
மாநில அளவிலான கலைத் திருவிழா போட்டிகளில் முதலிடம் பெற்ற பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் அரசு உதவிப் பெறும் தொடக்கப் பள்ளி மாணவி மகிழினிக்கு பாராட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி கல்வித் துறை சாா்பில், நடைபெற்ற கலைத் திருவிழா போட்டிகளில், பேச்சுப் போட்டியில் பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் அரசு உதவிப் பெறும் தொடக்கப் பள்ளியைச் சோ்ந்த 3-ஆம் வகுப்பு மாணவி மகிழினி கலந்து கொண்டு மாநில அளவில் முதலிடம் பிடித்தாா். இதையடுத்து, சிறுமிக்கு துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின், அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, அன்பில்மகேஷ் ஆகியோா் பாராட்டி பரிசுக் கோப்பை, சான்றிதழ் வழங்கினா்.
இந்த நிலையில், பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் அரசு உதவிப் பெறும் தொடக்கப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. பள்ளிச் செயலா் பிச்சைக் குருக்கள் மாணவியை பாராட்டி ரூ.10 ஆயிரம் வழங்கினாா்.
இதில் கோயில் அறங்காவலா்கள் சி.டி.பழனியப்பன், நாச்சாந்துபட்டி குமரப்பச்செட்டியாா், சோமசுந்தரகுருக்கள் ஆகியோா் கலந்து கொண்டனா். முன்னதாக, பள்ளித் தலைமை ஆசிரியா் எஸ்.ரெங்ராஜன் வரவேற்றாா். ஆசிரியை ஸ்வீட்டா நன்றி கூறினாா்.