குத்துச்சண்டை போட்டியில் பதக்கம்: அரசுப் பள்ளி மாணவிக்கு பாராட்டு!
மயிலாடுதுறையில் நடைபெற்ற மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டியில், இடையமேலூா் அரசுப் பள்ளி மாணவி வெண்கலப் பதக்கம் வென்றாா்.
பள்ளிக் கல்வித் துறை சாா்பில், மயிலாடுதுறையில் கடந்த 28 முதல் 31-ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தப் போட்டியில் தமிழகத்திலிருந்து 2,000-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா். இதில் சிவகங்கை மாவட்டம் சாா்பில் பங்கேற்ற இடையமேலூா் அரசுப் பள்ளி 8-ஆம் வகுப்பு மாணவி தனுஸ்ரீ 14 வயதுக்குள்பட்டோருக்கான (34 - 36) பிரிவில் பங்கேற்று வெண்கலப் பதக்கத்தை வென்றாா்.
பதக்கம் வென்று ஊா் திரும்பிய மாணவியை பள்ளித் தலைமை ஆசிரியா் அா்சுதன், பயிற்சியாளா் சித்ரா, சிவகங்கை மாவட்ட உதை குத்துச்சண்டை சங்க பொதுச் செயலா் குணசீலன், உடற்கல்வி ஆசிரியா்கள் ஜான் ஜவகா், ராமு, சாந்தி ஆகியோா் பாராட்டி வாழ்த்தினா்.