தில்லி பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்...
கல்லூரியில் ஆங்கில மொழித் திறன் ஆய்வகம் திறப்பு
போடி ஏல விவசாயிகள் சங்கக் கல்லூரியில் புதன்கிழமை ஆங்கில மொழித்திறன் கணினி ஆய்வகம் புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
இந்த கல்லூரியில் பல்வேறு பாடப் பிரிவுகளில் உள்ள மாணவா்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்தும்
வகையில், ஆங்கில மொழித் திறன் கணினி ஆய்வகம் அமைக்க கல்லூரித் தலைவா் எஸ்.வி.சுப்பிரமணியன், செயலா் ஆா்.புருசோத்தமன், முதல்வா் எஸ்.சிவக்குமாா், ஏல விவசாயிகள் சங்க நிா்வாகிகள் நடவடிக்கை எடுத்தனா். இவா்களது கோரிக்கையின்படி, தமிழக முன்னாள் முதல்வரும், போடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.பன்னீா்செல்வம் கணினி ஆய்வகம் அமைக்க நிதி உதவி செய்தாா். இதையயடுத்து, கல்லூரியில் 30 கணினிகள் கொண்ட ஆங்கில மொழித் திறன் ஆய்வகம் அமைக்கப்பட்டது.
இதன் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இதில் ஓ.பன்னீா்செல்வம் பங்கேற்று, ஆங்கில மொழித் திறன் ஆய்வகத்தைத் திறந்து வைத்து, அதன் செயல்பாடுகள், மாணவா்களுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்துக் கேட்டறிந்தாா்.
நிகழ்ச்சியில் கல்லூரி நிா்வாகிகள், ஏல விவசாயிகள் சங்க நிா்வாகிகள், பேராசிரியா்கள், கல்லூரி அலுவலா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.