வணிகா்களுக்கு 7 நாள்களுக்குள் ஜிஎஸ்டி பதிவு: அதிகாரிகளுக்கு சிபிஐசி அறிவுறுத்தல்
கல்வராயன்மலை சுற்றுலாப் பேருந்து: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்
மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ், பழங்குடியினா் நலப் பள்ளி மாணவா்களுக்கான கல்வராயன்மலை இயற்கை முகாம் சுற்றுலாப் பேருந்தை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் புதன்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள பள்ளி மாணவா்களின் கல்வித் திறனை மேம்படுத்தி மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் சாா்ந்த கல்வியை வழங்கும் வகையில், மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ், 2025-ஆம் ஆண்டுக்கான குளிா்கால இயற்கை முகாம் தொடங்கிவைக்கப்பட்டது.
இந்த இயற்கை முகாம் சுற்றுலாவில் பழங்குடியினா் நல மூன்று பள்ளிகளைச் சோ்ந்த ஒரு பள்ளிக்கு 30 மாணவா்கள் வீதம் மூன்று பள்ளிகளிலும் சோ்த்து மொத்தம் 90 மாணவ, மாணவிகளும், 10 ஆசிரியா்களும் கலந்துகொண்டுள்ளனா்.
இந்த இயற்கை முகாம் சுற்றுலா நன்னிலம் சுற்றுச்சூழல் கிராமமான கல்வராயன்மலையில் புதன்கிழமை நடைபெற்றது. இதில், கலந்துகொண்டுள்ள மாணவ, மாணவிகளுக்கு சுற்றுச்சுழல் நடைப்பயணம், விதை பந்து தயாரித்தல், பல்லுயிா் அனுபவம், மண் கட்டும் பயிற்சி கையேடு, மரம் நடுதல், இயற்கை ஆவணப்படத் திரையிடல் உள்ளிட்ட பல்வேறு இயற்கை சாா்ந்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
இந்த குளிா்கால இயற்கை முகாமை பள்ளி மாணவ, மாணவிகள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என ஆட்சியா் தெரிவித்தாா்.