செய்திகள் :

கல்வி நிதி விவகாரம்: ``தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம்" -உதயநிதி ஸ்டாலின் காட்டம்

post image

புதிய கல்விக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு நிதி தர இயலாது என மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்வின் போது செய்தியாளர் சந்திப்பில் கூறினார். இது தமிழ்நாட்டின் அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் முதல் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், ``தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கையை ஏற்க முடியாது என்பதை நாம் அரசியலால் தூண்டப்பட்டு (Politically Motivated) பேசுவதாக ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சொல்லி உள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.

மொழி, இன உணர்வு வந்தப் பிறகு தான் தமிழர்களுக்கு அரசியலே வந்தது; எங்கள் இடுப்பில் கொள்கை எனும் வேட்டி ஏறிய பிறகு தான், தோளில் பதவி எனும் துண்டு வந்தது. நிதி உரிமையைக் கேட்டால், இந்தியை ஏற்க வேண்டும் என்று தமிழ்நாட்டை மிரட்டுவதா? தமிழ்நாட்டைச் சீண்டுவது, தீயை தீண்டுவதற்கு சமம். ரொம்பவும் வேண்டாம் - சுதந்திரத்துக்கு பிறகான தமிழ்நாட்டின் வரலாற்றைப் படித்தாலே இது உங்களுக்குப் புரியும். மாநிலங்கள் சேர்ந்து உருவாக்கியது தான் ஒன்றிய அரசு. எங்கள் குழந்தைகளின் கல்விக்கான நிதியை தான் நாங்கள் கேட்கிறோம். நீங்கள் கொடுக்கும் இடத்திலும் நாங்கள் பெறும் இடத்திலும் இருப்பதாய் நினைத்து தலைக்கனம் காட்ட வேண்டாம். தமிழ்நாடு பொறுக்காது!" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Doctor Vikatan: எதைச் சாப்பிட்டாலும் வயிற்று உப்புசம்... என்னதான் காரணம், எப்படி சரிசெய்வது?

Doctor Vikatan: என்வயது 34. சைவ உணவுப் பழக்கம் உள்ளவன். நார்ச்சத்துக்காக காய்கறிகளும், புரதச்சத்துக்காகபருப்பு உணவுகளும்எடுத்துக்கொள்ளும்படிஎன்னை மருத்துவர் அறிவுறுத்தினார். ஆனால், இந்த இரண்டுமே எனக்க... மேலும் பார்க்க

Udhayanidhi Stalin: ``யார் அரசியல் செய்வது?'' -மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் உதயநிதி ஆதங்கம்!

தமிழ்நாட்டின் பள்ளிகளில் மத்திய அரசு கொண்டுவந்த புதிய கல்விக்கொள்கையின்படி, மும்மொழிக் கொள்கையை ஏற்காததால் கல்விக்காக வழங்கப்பட்டுவந்த நிதியை நிறுத்தியுள்ளார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். இது இ... மேலும் பார்க்க

``உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்; இந்த விளையாட்டு எங்களிடம் செல்லாது'' - நடிகர் பிரகாஷ்ராஜ்

தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கை உள்ளிட்டவைகளை வலியுறுத்தும் புதிய தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்துமாறு மத்திய பா.ஜ.க அரசு வலியுறுத்தி வருகிறது. இந்த நிலையில், நடிகர் பிரகாஷ்ராஜ் தன் எக்ஸ் பக்கத்தி... மேலும் பார்க்க

UP: ``ஆங்கிலம் அதிகாரத்தை அடையும் ஆயுதம்'' - மாணவர்களிடம் ராகுல் காந்தி பேச்சு

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, உத்தரபிரதேசம் மாநிலம் ரேபரேலியில் மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் மாணவர்களுக்கு ஆங்கிலம் படிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஆங்கில மொழியின் மதிப்பையும் எடுத்து... மேலும் பார்க்க

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தி உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக வெளியான தகவலில், 78 வயதாகும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந... மேலும் பார்க்க