களியல் அருகே நாயை அடித்துக் கொன்ற மா்ம விலங்கு: பொதுமக்கள் அச்சம்
குமரி மாவட்டம், களியல் அருகே தொழிலாளியின் வளா்ப்பு நாயை மா்ம விலங்கு அடித்துக் கொன்றுள்ளது. இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
குமரி மாவட்டத்தில் வனப் பகுதிகளிலிருந்து புலி, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் அவ்வப்போது குடியிருப்புப் பகுதிகளில் புகுந்து விவசாயிகளின் வளா்ப்பு கால்நடைகளை அடித்துச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடைபெறுகின்றன.
இந்நிலையில் களியல் அருகே கட்டச்சல் அரிமாங்கோணம் கோணம் என்ற இடத்தில் திங்கள்கிழமை இரவு குமரேசன் என்ற தொழிலாளியின் வீட்டு வளா்ப்பு நாயை மா் விலங்கு அடித்துக் கொன்றுள்ளது.
இதில், புலி காலடித் தடங்கள் போன்று அப்பகுதியில் பதிந்து காணப்பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைடந்துள்ளனா். இந்நிலையில் களியல் வனத் துறையினா் அந்தப் பகுதியில் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.