கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு
கடலூா் அருகே கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடலூா் தேவனாம்பட்டினம் சுனாமி நகரிலுள்ள கழிவுநீா் சுத்திகரிப்பு நிலைய கட்டடம் சேதமடைந்ததால், அதன் அருகில் புதிய கட்டடம் கட்ட ரூ.26 கோடி நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.