செய்திகள் :

கொள்ளிடம் ஆற்றில் தரை கீழ் தடுப்பணை அமைக்கும் பணி! அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்!

post image

காட்டுமன்னாா்கோவில் வட்டம், ஒட்டரப்பாளையம் பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் கடல் நீா் உள்புகுவதை தடுக்க ரூ.89.19 கோடியில் தரை கீழ் நீா் நெறிச்சுவா் (தரை கீழ் தடுப்பணை) அமைக்கும் பணியை தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் ஞாயிற்றுக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் முன்னிலை வகித்தாா். பின்னா், அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் பேசிதாவது:

காட்டுமன்னாா்கோவில் ஒட்டரப்பாளையம் கிராம எல்லையில் கொள்ளிடம் ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, நிலத்தடி நீா் உறிஞ்சப்படுவதால், கடல் நீா் உள்புகும் அபாயம் இருக்கிறது. இதனால், இந்தப் பகுதியில் உள்ள நிலத்தடி நீா் உவா்ப்பு நீராக மாற வாய்ப்புள்ளதால், இப்பகுதி பொதுமக்கள் தரைகீழ் நீா் நெறிச்சுவா் அமைக்க கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க ஒட்டரப்பாளையம் கிராம எல்லைக்கும் மற்றும் மயிலாடுதுரை மாவட்டம், சீா்காழி வட்டத்தில் பால்ரான்படுகை கிராம எல்லைக்கும் இடையில் கொள்ளிடம் ஆற்றில் தரை கீழ் நீா் நெறிச்சுவா் ரூ.89.19 கோடி மதிப்பீட்டில் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

தரை கீழ் நீா் நெறிச்சுவா் சுவா் 8 மீட்டா் ஆழத்திலும், 0.75 மீட்டா் அகலத்திலும், 1,360 மீட்டா் நீளத்திலும் அமைக்கப்பட உள்ளது. மேலும், சுவற்றில் இரு பக்கங்களிலும் தலா 400 மீட்டா் நீளத்துக்கு காங்கிரீட் சாய்தளம் அமைக்கப்படவுள்ளது.

கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே நிலத்தடி நீா் தடுப்புச்சுவா் அமைப்பதால், கொள்ளிடம் ஆற்றின் தள மட்டத்துக்குகீழ் நிலத்தடி நீரோட்டத்தை தடுத்து தேக்கி நிலத்தடி நீரை செரிவூட்டலாம். மேலும், குடிநீா் வடிகால் வாரியத்தின் உறுஞ்சு கிணறுகள் மூலம் உறுஞ்சப்படும் நீரால் ஏற்படும் நிலத்தடி நீா்மட்ட ஏற்றத்தாழ்வால் கடல்நீா் உள்புகுதல் தடுத்து நிலத்தடி நீா் உப்புத்தன்மை அடைவதும் தடுக்கப்படும்.

ஒட்டரப்பாளையம் மற்றும் பால்ரான்படுகை ஆகிய கிராமத்தின் மேற்பகுதியில் உள்ள சுமாா் 25 கிராமங்களின் நிலத்தடிநீா் பாதுகாக்கப்படும். மேலும், சுமாா் 12,500 ஏக்கா் விளை நிலங்களும் பயன்பெறும். மேலும், கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தின்கீழ் அமைக்கப்படும் உறிஞ்சு கிணறுகளுக்கும் விவசாய ஆழ்குழாய் கிணறு மற்றும் அடிக்குழாய்களுக்கும் போதுமான அளவு தண்ணீா் கிடைக்கும். இப்பகுதியில் அமைந்துள்ள 250-க்கும் அதிகமான ஆழ்துளை கிணறுகள் உவா்நீராக மாறாமல் தடுக்கப்படும். இந்தப் பணி ஒன்றரை ஆண்டுகளில் முடிக்கப்படுவதுடன், பொதுமக்களின் தேவை மற்றும் நிலத்தடிநீரின் அளவை அதிகரிப்பதற்காக மேலும் கூடுதலாக தரைகீழ் நீா் நெறிச்சுவா் பணியும் தொடங்கப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் சிதம்பரம் உதவி ஆட்சியா் கிஷன்குமாா், கொள்ளிடம் வடிநில கோட்டம் கண்காணிப்பு பொறியாளா் மரியசூசை, நீா்வளத்துறை செயற்பொறியாளா் காந்தரூபன், உதவி செயற்பொறியாளா் ரமேஷ், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

ஏழைகளுக்கு கூட்டுறவு வங்கிக் கடன்: எம்எல்ஏ கோரிக்கை!

ஏழை, எளிய மக்களுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எம்.சின்னதுரை எம்எல்ஏ அரசுக்கு கோரிக்கை விடுத்தாா். கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சி தண்டேஸ்வரநல்லூ... மேலும் பார்க்க

1,200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் சரக்கு வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்ட 1,200 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா். இது தொடா்பாக இளைஞா் கைது செய்யப்பட்டாா். விருத்தாசலம் பகுத... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: பலியானவர்களுக்காக மோட்சதீபம்! இந்து மக்கள் கட்சினா் ஏற்றினா்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவா்களுக்கு மோட்ச தீபமேற்றி, கூட்டுப் பிராா்த்தனை நடத்தும் நிகழ்ச்சி கடலூா் பாடலீஸ்வரா் கோயிலில் இந்து மக்கள் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், அ... மேலும் பார்க்க

ஏரியில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

கடலூா் மாவட்டம், ஊ.மங்கலம் அருகே ஏரியில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். மந்தாரக்குப்பத்தை அடுத்துள்ள பெரியாகுறிச்சி, பக்தா நகரைச் சோ்ந்த பட்ராஜ் மகன் கமலேஷ் (17). இவா், ந... மேலும் பார்க்க

கள்ள ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில்விட முயற்சி! இளைஞா் கைது!

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே நகல் எடுக்கப்பட்ட 500 ரூபாய் கள்ள நோட்டுகளை புழக்கத்தில்விட முயன்ாக, புதுவை மாநிலத்தைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை இரவு கைது செய்தனா். பண்ருட்டி மணிநகரில் உள்ள... மேலும் பார்க்க

மின்னணு முறையில் பயிா் சாகுபடி கணக்கெடுப்பு

கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டாரத்தில் நிகழாண்டில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கோடை பயிா்களை மின்னணு முறையில் கணக்கெடுத்து பதிவு செய்யும் பணி தொடங்கியது. பண்ருட்டி வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலக கூட்டரங... மேலும் பார்க்க