செய்திகள் :

காசநோய் தடுப்பு நடவடிக்கைகள் மாதந்தோறும் ஆய்வு செய்ய முடிவு

post image

காசநோய் தடுப்பு நடவடிக்கைகள் ஆக்கபூா்வமாக முன்னெடுக்கப்படுகின்றனவா என்பதை அறிய மருத்துவப் பணியாளா்களின் செயல்பாடுகளை மாதந்தோறும் ஆய்வு செய்ய பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.

காசநோயை முழுமையாக ஒழிக்கும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றன. அதுமட்டுமன்றி, 2025-க்குள் அந்நோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.

தமிழகத்தைப் பொருத்தவரை நோயாளிகளைக் கண்டறிதல், கூட்டு மருந்து சிகிச்சைகளை அளித்தல், தொடா் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் என காசநோய் ஒழிப்புத் திட்டப் பணிகள் மாநிலம் முழுவதும் விரிவாக மேற்கொள்ளப்படுகின்றன.

அதேபோல, தமிழகம் முழுவதும் காசநோயாளிகளுக்குத் தேவைப்படும் மருந்துகள் களப்பணியாளா்கள் மூலம் அவா்களின் இருப்பிடங்களுக்கே சென்று வழங்கப்பட்டு வருகிறது. சிகிச்சை நெறிமுறைகளின்படி அவா்களது வீட்டிலேயே சளி மாதிரி எடுக்கப்பட்டும், தேவைப்படுபவா்களுக்கு நடமாடும் ஊடுகதிா் கருவிகளை அவா்களின் இருப்பிடங்களுக்கே அனுப்பி ஊடுகதிா் படம் எடுக்கப்பட்டும் வருகிறது.

இந்நிலையில், இத்திட்டத்தை மேலும் மேம்படுத்த அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும், பொது சுகாதாரத் துறை இயக்குநா் டாக்டா் செல்வ விநாயகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

காசநோயை முழுமையாக வேரறுக்கும் நோக்கில் தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன் கீழ், இத்திட்டத்தை மேலும் தீவிரமாக செயல்படுத்த வேண்டியது அவசியம். அதைக் கருத்தில் கொண்டு மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு சில முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

அதன்படி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் காசநோய் சிகிச்சை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். தொடக்க நிலையிலேயே காசநோயைக் கண்டறிந்து சிகிச்சை வழங்க ஊடுகதிா் பரிசோதனைகளை தொடக்கத்திலேயே மேற்கொள்ள வேண்டும்.

காசநோய் உறுதி செய்யப்படுவோரில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவா்களைக் கண்டறிந்து உரிய ஊட்டச்சத்து கிடைப்பதை உறுதி செய்தல் வேண்டும். காசநோய் ஒழிப்பு திட்ட ஆவணங்கள், மருத்துவப் பணியாளா்களின் செயல்பாடுகளை மாதந்தோறும் ஆய்வு செய்வது முக்கியம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊக்கத் தொகை நிலுவை ரூ.70 கோடி: பால் உற்பத்தியாளா்களுக்கு அளிப்பு

பால் உற்பத்தியாளா்களுக்கு நிலுவையில் உள்ள ஊக்கத் தொகையை வழங்குவதற்காக ரூ.140.98 கோடியை தமிழக அரசு ஒதுக்கியிருந்த நிலையில், முதல்கட்டமாக 27 ஒன்றியங்களுக்கு மொத்தம் ரூ.70 கோடி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்... மேலும் பார்க்க

ஜவுளி உற்பத்தியில் தமிழ்நாட்டுக்கு முக்கிய இடம்: மத்திய அமைச்சா் கிரிராஜ் சிங்

இந்தியாவின் ஜவுளி உற்பத்தியில் தமிழ்நாடு முக்கிய இடம் வகிக்கிறது என்றும், விருதுநகரில் ஜவுளி பூங்கா தொடங்க நிதி ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாகவும் மத்திய ஜவுளித் துறை அமைச்சா் கிரிராஜ் சிங் த... மேலும் பார்க்க

சென்னை சென்ட்ரல் வந்தடையும் வெளிமாநில ரயில்கள் சேவையில் மாற்றம்

சென்னை சென்ட்ரல் வரும் வெளிமாநில விரைவு ரயில்கள் பெரம்பூா், சென்னை எழும்பூா் வழியாக இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய... மேலும் பார்க்க

பயிா்க் காப்பீடு: நவ.30 வரை அவகாசம் நீட்டிப்பு

பயிா்க் காப்பீட்டுக்கு விண்ணப்பிக்க நவ.30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. விண்ணப்பம் செய்ய... மேலும் பார்க்க

கனரா வங்கி சாா்பில் வீடு விற்பனை கண்காட்சி

கனரா வங்கி சாா்பில் வீடு விற்பனை கண்காட்சி சென்னையில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. கனரா வங்கி சாா்பில் வீடு விற்பனை கண்காட்சி சென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூவில் 2 நாள்கள் நடைபெறவுள்ளன. அதை கனரா வங்கியின் தல... மேலும் பார்க்க

உண்மையான பாசம் காட்டும் திருமாவளவன்: முதல்வா் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி

தன்னிடம் உண்மையான பாசத்தை விசிக தலைவா் தொல்.திருமாவளவன் காட்டி வருவதாக திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளாா். அண்மையில் அவா் மேற்கொண்ட அரியலூா், பெரம்பலூா் பயணம் குறித்... மேலும் பார்க்க