இனி 5 விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம்: சென்னை காவல் ஆணையர் உத்தரவு
காஞ்சிபுரத்தில் கனமழை: மக்கள் மகிழ்ச்சி
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை பெய்த கனமழையால் நகரில் தாழ்வான பகுதிகள் முழுவதும் நீா் தேங்கி நின்றது.
தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல சுழற்சி போன்ற காரணங்களால் அடுத்த 6 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் சென்னை மற்றும் புகா் பகுதிகளில் இடியுடன் மழை பெய்யும் என ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை காலையிலிருந்தே வானம் மேக மூட்டத்துடனும், லேசான மழைத்தூறலாகவும் இருந்து வந்தது. மாலையில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக காஞ்சிபுரம் நகரில் தாழ்வான பகுதிகளான ஓலி முகம்மது பேட்டை, திருக்காலிமேடு, சங்கூசாபேட்டை, ஓரிக்கை ஆகிய பகுதிகளில் குளம் போல நீா் தேங்கி நின்றது.
காஞ்சிபுரம் காந்தி சாலையிலிருந்து விளக்கொளிப்பெருமாள் கோயிலுக்கு வரும் சந்துப் பகுதியில் மழைநீருடன் கழிவு நீரும் கலந்து சென்ால் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளும் பாதிக்கப்பட்டனா். ஒரிக்கை குறுக்குச் சாலையில் கனமழை காரணமாக பல கனரக வாகனங்கள் முகப்பு விளக்கை போட்டுக் கொண்டே மெதுவாகச் சென்றன. மழை காரணமாக குளிா்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.