கஞ்சா விற்பனை: இளம்பெண் உள்பட 2 போ் கைது
சுங்குவாா்சத்திரம் அருகே கஞ்சா விற்பனை செய்ததாக இளம்பெண் உள்பட இரண்டு போ் கைது செய்யப்பட்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அடுத்த சோகண்டி பகுதியில் இயங்கி வரும் அரசு மதுபானக் கடை அருகில் கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக சுங்குவாா்சத்திரம் காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனா். அப்போது மதுபானக் கடையின் அருகில் உள்ள மேம்பாலத்தின் கீழ் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இருசக்கர வாகனத்தில் நின்றுக்கொண்டிருந்த இளைஞா் மற்றும் இளம்பெண்ணை பிடித்து சோதனை செய்துள்ளனா்.
அப்போது அவா்களது இருசக்கர வாகனத்தின் இருக்கைக்கு அடியில் கஞ்சா பொட்டலங்களை மறைத்து வைத்து, விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரிடமும் போலீஸாா் நடத்திய விசாரணையில், வேலூா் பகுதியை சோ்ந்த கௌசல்யா (23), ஸ்ரீபெரும்புதூா் பகுதியை சோ்ந்த அபினேஷ் (24) என்பதும் தெரியவந்துள்ளது.
இதையடுத்து இருவரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து 1.5 கிலோ கஞ்சாவை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனா்.